செப்டம்பர் 06, ஜாலோர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜாலோர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில், சம்பவத்தன்று இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பி கொண்டு இருந்தார். வாகனத்தில் அமர்ந்தபடி அவர் பெட்ரோல் நிரப்பிய நிலையில், அவர் டேங்கை மூட முற்பட்டார். Asian Table Tennis Championship 2024: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; இந்திய அணி அறிவிப்பு.. சரத் கமல், மணிகா பத்ரா கேப்டன்..!
நொடியில் தவிர்க்கப்பட்டு பெரும் விபத்து:
அச்சமயம் திடீரென பெட்ரோல் டேங்கில் இருந்து தீப்பிடித்து எரியத்தொடங்கிய நிலையில், அதிர்ந்துபோனவர் சில நொடிக்குப்பின் சுதாரித்து இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கினார். அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர், உடனடியாக சுதாரித்து தீ அணைப்பான் கொண்டு அதனை கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த விஷயம் குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு:
பொதுவாக இருசக்கர வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்தால், எஞ்சின் மற்றும் டேங்க் போன்றவை இயல்பாகவே சூடாக இருக்கும். அப்போது, வாகனத்தை அணைத்துவிட்டு, சில நிமிடங்கள் நிழலில் நிறுத்தி பின் பெட்ரோல் நிரப்பலாம். இது தேவையில்லாத விபத்தை தவிர்க்கும். அதேபோல, பெட்ரோல் நிரப்பும்போது வாகனத்தை அணைத்து வைத்திருப்பது நல்லது.
பெட்ரோல் நிரப்பும்போது தீப்பிடித்த இருசக்கர வாகனம்:
Man's bike catches fire while refueling at a petrol station in Jalore, Rajasthan | #WATCH #Jalore #Rajasthan #Fire #ViralVideo pic.twitter.com/2gCfnntPJ0
— TIMES NOW (@TimesNow) September 5, 2024