Indian Post (Photo Credit: Facebook)

டிசம்பர் 22, புதுடெல்லி (New Delhi): இந்திய அரசுத்துறையில் மிகப்பெரிய, பழமையான துறைகளில் ஒன்றாக இருப்பது தபால் துறை. இத்துறையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நம்பிக்கைக்குரிய பல எதிர்கால முதலீடு திட்டங்கள், தபால் சேவை என இந்திய தபால் துறை மிகச்சிறப்பாக இன்றளவும் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மூலமாக, தபால் துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. Ramanthapuram News: பாம்பன் மீனவர்களிடம் சிக்கிய வாள் மீன் ரூ.56,000 க்கு விற்பனை.. மீனவர்கள் மகிழ்ச்சி.! 

போஸ்ட்மேன், மெயில் கார்ட் காலிப்பணியிடங்கள்:

அந்த வகையில், தபால் துறையில் (Post Office Recruitment) எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் (Multi-Tasking Staff MTS) பிரிவுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இதன் வாயிலாக போஸ்ட் மென் (Post Man), மெயில் கார்ட் (Mail Guard) ஆகிய பணியிடங்கள் நிரப்படுகிறது. 2025ம் ஆண்டுக்குள் காலியாக உள்ள 98 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பும் நடவடிக்கையில், ஒரு பகுதியாக முதற்கட்டமாக 32,850 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பு இனி வரும் ஆட்களில் வெளியாகும். Birth Control Tips: தம்பதிகளே கருத்தடை பற்றி சந்தேகமா? அசத்தல் டிப்ஸ் இதோ.! 

விண்ணப்பிக்கும் தேதி உட்பட பிற அறிவிப்புகள் விரைவில்:

அரசின் அறிவிப்பு வெளியானதும், ஆன்லைனில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். மெயில்கார்ட், போஸ்ட்மேன் பணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மாத சம்பளம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் வரை கிடைக்கும். இந்த பணியிடங்கள் முழுக்க-முழுக்க தேர்வர்களின் படிப்பு மதிப்பெண் வாரியாக மட்டுமே நிரப்பப்படும். இப்பணிகள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 பெறப்படும். எம்.டி.எஸ் பணிகளுக்கான ஆட்கள் (Indian Post MTS Recruitment 2025) சேர்ப்பு தொடர்பாக விண்ணப்பம் தொடங்கும் தேதி, நிறைவடையும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தபால் துறையில் போட்டித்தேர்வு இல்லாமல், மெரிட் முறையில் தேர்வாக மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும் என்பதால், தேர்வர்கள் தயாராக இருங்கள்.