பிப்ரவரி 24, சென்னை (Chennai News): ஆரம்பத்தில் ஃபெமினிஸ்ட் என்ற பெயரில் ஆண்கள் மது அருந்துவது புகைப்பிடித்தல் தவறில்லை எனில் நாங்கள் செய்வதும் தவறில்லை எனக் கூறி இவைகளை செய்தனார். ஆனால் இப்போது வயது வித்தியாசம் இல்லாமல் மதுவை அருந்துகின்றனர். மேலும் பப்புகளில் மற்றும் தனிப்பட்ட இடங்களில் குடித்து வந்த பெண்கள், தற்போது குடித்து விட்டு பொது இடங்களில் ரகளை செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணமே உள்ளது. இவர்கள் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களாக இருக்கின்றனர். அதனுடன் பல டீன் ஏஜ் மற்றும் இளம் பெண்களும் மது அருந்துகின்றனர்.

மதுபானத்திலும் போட்டி போடும் பெண்கள்:

இந்தியாவில் வருடத்திற்கு வருடம் மது அருந்தும் பெண்களில் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 25% உயர்ந்துள்ளது. டெல்லியில் கடந்த 3 ஆண்டுகளில் 37 சதவீதப் பெண்கள் மது அருந்துகின்றனர். ஆஸ்திரேலியா, ரஷ்யா, நார்வே, கோலம்பியா போன்ற நாடுகள் பெண்களால் அதிகளவு மதுபானம் எடுத்துக்கொள்ளும் நாடுகளாக உள்ளது.

இந்த அதிகரிப்பிற்கு காரணம் தற்போது இருக்கும் நவீன உலகின் பெண்களுக்கு இருக்கும் மன அழுத்தமும், வேலைச் சுமைகளுமே என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். முன்பு போல் ஒருவரின் வருமானம் வீடுகளுக்கு போதாது. குடும்பத்தை சரிக்கு சமமாக இருவரும் இணைத்து வருமானம் ஈட்டும் நிலைமை உள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், வீட்டில் இருக்கும் வேலைப்பளு, குழந்தைகளை கவனித்தல், வீடுகளில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவை ஓய்வில்லாமல் இருக்கச் செய்கிறது. அதனால் பல பெண்கள் இந்த மதுவை நாடுகின்றனர். Bridal Skincare: மணநாளில் ஜொலிக்க இவைகளை பின்பற்றுங்கள்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

சிலர் மட்டுமே மது மேலுள்ள ஆர்வத்தினால் குடிக்கின்றனர். இதில் பெண்களுக்கென்று பிரத்தியேகமாக பிங்கிங் மதுபானங்களும் சந்தைகளில் கிடைக்கின்றனர். அதனுடன் மைதானங்கள், திருமண மண்டபங்களில் மது அருந்துவதற்கு அனுமதியும் அளித்திருக்கின்றனர். மேலும் மால்களில் வெங்கிங் மெஷினிலும் இனி மது பானங்கள் கிடைக்க உள்ளது . மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் சரி.

வளர்ச்சியடைந்த பல நாடுகளில் பெண்கள் குடிப்பது சாதாரணமான ஒன்றுதான். ஏன் முன்பெல்லாம் நம் முன்னோர்களும் கள்ளு குடிக்கத்தான் செய்தனர். மது பானங்கள் அனைத்துமே உடலுக்கு கெடுதலை விளைவிக்காது. சிலவை உடலுக்கும் சருமத்திற்கு நன்மையை தர தான் செய்கின்றது. எதுவாயினும் அளவுடன் இருந்தால் ஆபத்தில் முடியாது.

பல இடங்களில் பெண்கள் மதுபானத்தை ஒழிக்க வேண்டும் என போராடி வருகின்றனர். மதுவால் பலரும் தங்கள் குடும்பம் மற்றும் வாழ்க்கையை இழந்திருப்பதையும் மறக்க முடியாது. அதிகளவு ஆல்கஹகால் உட்கொள்வது ஆண்களை விட பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. கல்லீரல் மட்டுமின்றி குழந்தைப்பேறு, மற்றும் பிறக்க போகும் குழந்தைக்கு உடல்நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தி விடும். ஆண்களானாலும் பெண்களானாலும் அளவுக்கு மீறி மதுபானம் அருந்துவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.