Bathroom Marriage Both File Pic (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 20, சென்னை (Chennai News): அனைத்து பெண்களும் தங்களின் திருமணத்தன்று தகதகவென ஜொலிக்க வேண்டும் என்றே விருப்பப்படுவர். வரப்போகும் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதை விட, தங்களின் திருணநாளில் எப்போதும் விட தங்களை அழகாக காட்ட என்ன என்ன செய்யலாம் என்பதில் தான் அதிக ஆர்வமும் காட்டுவர். மணப்பெண்கள் தங்களுடைய தினத்தில், தங்கம் போல் ஜொலிக்க நான்கு மாதத்திற்கு முன்பிலிருந்தே தங்களை அழகாக தயார்படுத்த சில டிப்ஸ்.

இயற்கை அழகைப் பெற:

திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே தங்கள் அழகைப் பராமரிப்பது அவசியம். திருமனத்திற்கு முன் பார்லர் சென்று இன்ஸ்டண்ட் பேசியல் செய்து கொள்வதெல்லாம் அன்னேரத்தில் கைக்கொடுக்காது. ஆனால் இயற்கை முறையில் தேகத்தைப் பளபளப்பாக்குவது சருமத்தைப் பாராமரித்தும் நெசுரல் அழகைப் பெற்றுத்தரும். Jeggings: அடிக்கிற வெயிலுக்கு ஜீன் போடுறீங்களா? அப்போ உடனே ஜெகின்ஸ்க்கு மாறுங்க..!

அடிக்கடி ஸ்டிமிங் & பேஷியல்:

திருமணத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பிலிருந்து முகத்திற்கு அடிக்கடி பேஷியல் செய்ய வேண்டும். வாரம் இரு முறையாவது பழங்களை கொண்டு பேஷியல் செய்வது முகத்தை மிருதுவாக மாற்றி பளபளப்பாகும். காஃபி பவுடர், கடலைமாவு, தயிர், முல்தானி பெட்டி, பீட்ரூட், சந்தனம், என சரும பராமரிப்புப் பொருட்களையும் ஃபேச் மாஸ்காகவும் அடிக்கடிப் பயன்படுத்த வேண்டும். கூடுதலாக ஆவி பிடித்து பேஷியல் செய்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகளை நீங்கி, நிறத்தை அளிக்கும். தினமும் குளிக்க போகும் முன் 2 நிமிடத்திற்கு முகத்தை ஸ்டிமிங் செய்யலாம். இது இளமையான தோற்றத்தை அளிக்கும்.

பழ பேஷியல்:

வீட்டிலேயே கிடைக்கும் பழங்கள், முகத்திற்கு பளபளப்பை அள்ளித் தருகின்றன. தக்காளி எப்போதும் கிடைக்கக்கூடிய சிற்ந்த பழமாகும். இதை ஸ்கரப்பாகவும் பயன்படுத்தலாம். தக்காளியை சர்க்கரையில் தொட்டு முகத்தில் தடவி 5 நிமிடத்திற்கு பின் கழுவலாம்.

பப்பாளி, மாம்பழம், ஆப்பிள், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, மாதுளை, தர்பூசணி போன்ற பழங்களில், தயிர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ் மாஸ்க் செய்து முகத்தில் தடவி வர வேண்டும். இவைகள் முகத்தில் உள்ள அழுக்குகள், புள்ளிகள், தழும்புகளை நீக்கி கிளாஸ் ஸ்கின்னைப் பெற்றுத்தரும்.

தேக அழகைப் பெற:

முகம் மட்டுமின்றி தேக சருமத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முகத்திற்கு பேஷியல் செய்வது போல், தினமும் குளிக்கும் போது கடலை மாவு, பாசிபயறு மாவு, மஞ்சள் பொடி இவைகளை உடல் முழுதும் தேய்து குளிக்க வேண்டும். இது உடலை மென்மையாக மாற்றும். வாரம் ஒரு முறை உடல் முழுவதையும் வழக்கமான காஃபி, லெமன் ஸ்கரப் போட்டு, மசாஜ் செய்து குளிக்க வேண்டும். மேலும் வேக்ஸ் செய்யும் பொழுதெல்லாம் பாடி லோஷன் அல்லது ரோஸ் வாட்டர் அவசியம் பயன்படுத்த வேண்டும்.

கை கால் மூட்டுக்கள், அக்குள் போன்ற உடலில் கருமை இருக்கும் பகுதிகளில், லெமன் மற்றும் மஞ்சளை கலவையாக்கி தடவி 10 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். இது கருமையை நீக்கி இயற்கை நிறத்தைப் பெற்றுத்தரும். குளிக்கும் நீரில் வேப்பிலை, இஞ்சி, துளசி, மஞ்சள், சந்தனம், ரோஜாபூ இதழ் இவைகளை பொடிகளாகவொ அல்லது எசன்ஸாகவோ பயன்படுத்தலாம். இது தேகத்தை மேலும் மென்மையாக்கி பளபளப்பாக்கும்.

பார்லரும் முக்கியமே:

வீடுகளில் தாமாகவே பலவகைகளில் அழகை மெருகேற்றினாலும் பார்லரில் சென்று முகத்திற்கு நிபுணர்களிடமும் பேஷியல்கள் செய்து கொள்வதும் சிறந்ததே. கோல்டன் பேஷியல், சார்க்கோல் பேஷியல், என வீடுகளில் செய்ய முடியாத பேஷியல்களை பார்லருக்குச் சென்று செய்து கொள்ளலாம்.

ஸ்கின்கேர் புராடெக்டின் பங்கு:

சன்ஸ்கிரீன், சீரம், டோனர்கள், மாய்சுரைசர்கல், லோசன்களை அழகிற்கு பயன்படுத்து பொருட்களாக கருதாமல் அவைகள் சருமத்தை பராமரிக்கும் பொருள் என உணர வேண்டும். முதலில் தங்கள் சருமத்தின் வகையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப ஸ்கின் கேர் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். இவைகள் சருமத்தை சுருக்கமடையாமல் இளமையாகவே வைத்திருக்கின்றன. இவைகள் திருமணத்திற்கு மட்டும் என்று பயன்படுத்தாமல் எப்போதும் உபயோகிக்க பழகிக்கொள்ளலாம்.

அழகைக் காக்க உணவும் அவசியம்:

அழகைப் பராமரிக்க இவைகளை பின்பற்றினால் மட்டும் போதுமானதல்ல. சரியான ஊட்டசத்துள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். முறையான ஊட்டசத்துயின்றி எவ்வளவு தான் அழகு குறிப்புகளைப் பின்பற்றினாலும் அவைகள் பயனளிக்காது.

தினமும் காலை அல்லது மாலையில் பாதம்,பிஸ்தா, முந்திரி இவைகள் தலா ஒன்று என சாப்பிட்டு வர வேண்டும். இது உடல் சருமத்தை பளபளப்பாக்கி பொலிவாக்குகிறது.

காலை எழுந்ததும் ஆப்பிள், கேரட்,பீட்ரூட் இவை மூன்றிலும் ஒரு துண்டுகள் எடுத்து அறைத்து ஒரு கிளாஸ் குடித்து வர வேண்டும். இது 15 நாட்களிலேயே நிறம் அதிகரிப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இவைகளுடன் தினமும் ஒரு பௌவுள் பழக்கலவையை சாப்பிட வேண்டும்.

அதிக எண்ணெய் உள்ள உணப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பொரித்த உணப்பொருட்கள், துரித உணவுகள் முகத்தில் எண்ணெய் தன்மையை அதிகப்படுத்தி முகப்பருக்கள், வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் வர வைத்துவிடும்.

மணப்பெண்ணிற்கான மன அமைதி:

அழகைக் காப்பதில் முக்கிய இடத்தில் இருப்பதில் மன மகிழ்ச்சியும், மன அமைதியுமே. மணப்பெண்கள் பொலிவாக தெரிய வேண்டுமெனில் சரியான தூக்கமும் மகிழ்ச்சியும் அவசியமாக இருக்க வேண்டும். முறையான தூக்கம் சருமத்தை ஹெல்தியாக வைக்கும் கருவளையத்தையும் குறைக்கும். அதிக ஸ்டிரெஸ், உடலில் சோர்வு ஏற்பட்டாலும் சருமம் ஆரோக்கியமின்றி பொலிவை இழக்க நேரிடும். மகிழ்ச்சியாக இருப்பின் மணநாள் மட்டுமின்றி அனைத்து நாட்களும் அழகுடன் திகழலாம்.