மார்ச் 27, சென்னை (Chennai News): மாத வருமானம் வாங்கும் ஒவ்வொருவரும், தங்களின் வருமான வரி அறிக்கையை (Income Tax Filing) தாக்கல் செய்வது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயம் செய்துள்ள வரம்பு மற்றும் நிபந்தனைகளின்படி, வருமான வரியை தாக்கல் செய்வது, பின் அதனை உரிய முறையில் பதிவு செய்து பெற்றுக்கொள்வது குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொதுபட்ஜெட் 2025ல், வருமான வரிதாக்கள் செய்ய காலக்கெடு 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக நீட்டிப்பு செய்ப்பட்டுள்ளது. அதன்படி, தணிக்கை செய்யாத வரி செலுத்துவோருக்கு, எதிர்வரும் நிதியாண்டில், ஜூலை மாதம் 31ம் தேதி வரை ஐடிஆர் தாக்கல் செய்ய காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. 2024 - 2025ம் நிதியாண்டுக்கான ஐடிஆர் 31 ஜூலை 2025 க்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இக்காலக்கெடுவை தவறவிட்டால், அபராதம் மற்றும் வட்டியுடன் 31 டிசம்பர் 2025 க்குள் தாக்கல் செய்யலாம். 24-Year-Old Girl Raped: 2 ஆண்டுகளாக ஓயாத டார்ச்சர்.. தந்தையின் ஆணுறுப்பு நறுக்.. அலறவிட்ட மகள்.!
வருமான வரி செலுத்த இறுதி நாள்:
அதன்படி, 2024 - 2025ம் ஆண்டுக்கான வரிதாக்கள் செய்ய தனிநபருக்கு 31 ஜூலை 2025 காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தணிக்கை தேவைப்படும் வணிக நிறுவனங்களுக்கு 31 அக். 2025 இறுதி நாள் ஆகும். சர்வதேச, உள்நாடு/வெளிநாடு முதலீடு நிறுவனங்களுக்கு 30 நவம்பர் 2025 காலக்கெடு ஆகும். திருத்தப்பட்ட வருமான வரித்தாக்கல் செய்ய 31 டிசம்பர் 2025 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. வருமான வரியை சரிவர தாக்கல் செய்யாத பட்சத்தில், வருமான வரி சட்டப்பிரிவு 234A படி, வரித்தொகைக்கு மாதம் 1% வட்டி அபராதமாக செலுத்த நேரிடலாம். தாமதக்கட்டணமாகவும் 234F பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படும். பங்குசந்தை, சொத்து, வணிகம் போன்ற விஷயத்தில் இழப்பு ஏற்பட்டால், அதனை ஈடு செய்யும் வகையிலும் ஐடிஆர் தாக்கல் செய்ய சில சலுகைகள் வழங்கப்படும். ஒருவேளை ஐடிஆர் தாக்கல் செய்யாத பட்சத்தில், செய்ய தவறிவிட்ட பட்சத்தில், அரசின் உரிய அபராதம் உட்பட நிபந்தனையுடன் அதனை தாக்கல் செய்யலாம். புதுப்பிக்கப்பட்ட வருமான வரியை டிசம்பர் 31 க்குள் தாக்கல் செய்துகொள்ளலாம்.
உங்கள் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வது உங்கள் வரி கடமைகளை நிர்வகிப்பதில் ஒரு முக்கிய பகுதியாகும், மேலும் சமீபத்திய காலக்கெடு மற்றும் தேவைகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பது முக்கியம். இந்த வழிகாட்டி பல்வேறு வகை வரி செலுத்துவோருக்கான ஐடிஆர் தாக்கல் நிலுவைத் தேதிகளை எடுத்துக்காட்டுகிறது, இது வரி தாக்கல் செயல்முறையை எளிதாக வழிநடத்த உதவுகிறது. கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் இறுதி வரை, நிதியாண்டில் தனிநபர்/நிறுவனம் ஈட்டிய வருமானத்துக்கு ஏற்ப, அவர்களின் வருமான வரிதாக்கல் முறைகள் மாறுபடும்.