Visual from Spot (Photo Credit: ANI)

மே 19 , ஜார்கண்ட் (Jharkhand News): சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் என்பது அதிகளவு உள்ளது. அங்கு அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டம் நடைபெறும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.

மனம் திருந்தி இயல்பு வாழ்க்கை வாழுவதற்கு ஆசைப்படும் நக்சல்களை சமூகத்தில் அங்கீகரிக்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தீய எண்ணம் கொண்டவர்களால் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நக்சல் ஒழிப்பு படையினர் பயணம் செய்த வாகனம் மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டில் சிக்கி சின்னாபின்னமானது. இந்த கொடூர தாக்குதலில் 10 காவல் துறையினர் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியாகினர். Delhi Shocker: கல்லூரி வளாகத்தில் காதலியை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்த மாணவர்; பரிசை வாங்க மறுத்ததற்காக பயங்கரம்..!

பயங்கரவாதிகள் அவ்வப்போது தங்களின் தாக்குதலை நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்களுக்கு கிடைத்த ஆயுதங்களை வைத்து மேற்கொள்கிறார்கள். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்களின் கண்ணிவெடியில் சிக்கி சிறுவன் பலியாகியுள்ளான்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பசா (Chaibasa) மாவட்டத்தில் இருக்கும் மேற்கு சிங்பூம், ரேங்தாஹாட்டு (West Singhbhum, Rengdahatu) பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன், அங்குள்ள வனப்பகுதியில் நக்ஸல்களால் வைக்கப்பட்ட ஐ.இ.டி ரக கண்ணிவெடியில் சிக்கி பரிதாபமாக பலியாகினான். இந்த விஷயம் தொடர்பாக சாய்பசா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.