மே 19, நொய்டா (Delhi Crime News): டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா (Greater Nodia) பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலை.,யில் கான்பூர் (Kanpur) பகுதியை சேர்ந்த சினேகா சவுராசியா (வயது 21) என்ற மாணவி பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த வகுப்பில் அனுஜ் சிங் என்ற மாணவரும் படித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக (Love) மாறியுள்ளது. இதனையடுத்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே காதல் ஜோடிகளுக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில் இருவரும் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அனுஜ் சிங், கல்லூரி வளாகத்தில் காதலியை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து தப்பி சென்றார். அங்கிருந்து விடுதிக்கு சென்றவர், தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். TN 10th Result 2023: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?.. வழக்கம்போல சாதனை படித்த பெண்கள்.!
இந்த விஷயம் தொடராக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கேன்டீனில் இருவரும் பேசிக்கொள்ளும்போது அனுஜ் சினேகாவுக்கு பரிசு கொடுக்கிறார். சினேகா அதனை ஏற்க மறுக்கிறார்.
இதன்பின்னரே இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது அனுஜ் சிங் தனது காதலி சினேகாவின் வயிற்றில் சுட்ட நிலையில், அவர் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக பலியாகினர்.