டிசம்பர் 14, பெங்களூர் (Bangalore): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பசவனகுடி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "கடந்த ஆண்டு பூரணசந்திரா என்பவருக்கும் - எனக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. எனது கணவர் திருமணத்திற்கு பின் தனது கடனை அடைக்க வேண்டும் என்று கூறி ரூபாய் 10 இலட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமை செய்தார்.
வரதட்சணை கொடுமை: கணவரிடம் நான் வரதட்சணைக்கு மறுப்பு தெரிவித்த நிலையில், எனது குடும்பத்தாரிடம் சண்டையிட்டு பணம் கேட்டார். அவர்கள் எங்களது பூர்வீக நிலத்தை விற்பனை செய்து ரூபாய் 2 இலட்சம் வரதட்சணை கொடுத்தனர். எஞ்சிய எட்டு லட்சம் பணத்தை கேட்டு என்னை தினமும் பெல்டால் அடித்து கொடுமை செய்து வந்தார். நான் குடும்பத்தினரை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காக பல வலிகளை தாங்கி, வாழ்க்கையை நகர்த்தி வந்தேன். Garlic Prices Rise Across Cities: ஏறும் பூண்டு விலை… வியாபாரிகள் வேதனை..!
நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல்: வரதட்சணை கொடுமைக்கு எனது கணவரின் குடும்பத்தாரும் உறுதுணையாக இருந்தனர். இந்நிலையில், எனது கணவர் சம்பவத்தன்று தனது இரண்டு நண்பர்களை அழைத்து வந்து, அவர்களுடன் தனிமையில் இருக்குமாறு மிரட்டினார். செல்போனில் ஆபாச வீடியோக்களை காண்பித்து, அதில் வரும்படி என்னை தனிமையில் இருக்குமாறும் கட்டாயப்படுத்துகிறார். எனக்கு அதில் விருப்பம் இல்லை என்று எதிர்த்தபோது, அவர் கடுமையாக தாக்கினார். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என்னை காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
வழக்குப்பதிந்த காவல்துறையினர்: இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். NIA Raid: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள் பகீர் தகவல் எதிரொலி: பெங்களூரில் 6 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனை..!
மனைவி மாற்றும் விவகாரம்: கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் மனைவிகளை மாற்றும் கும்பலைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது வரதட்சணை கொடுமையால் தனது சொந்த மனைவியை நண்பர்களுடன் தனிமையில் நெருங்கியிருக்க வற்புறுத்திய கணவனின் செயல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உணர்வுகளை பணமாக்கும் கும்பலின் மோசடி செயல்: மேலை நாடுகளில் ஒருசிலர் கடைபிடிக்கும் கணவன் - மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருக்கும் செயல்கள், இந்தியாவில் துணையை வற்புறுத்தி நடந்து வருகிறது. இவ்வாறான மேற்கத்திய கலாச்சாரத்திற்கு அங்கேயே எதிர்ப்பு இருக்கிறது. இவ்வாறான செயல்களை தங்களுக்கான பணம் பறிக்கும் செயலக முன்னெடுக்கும் கும்பல், அது சார்ந்த ஆதரவாளர்கள் போல தங்களை அடையாளப்படுத்தி, தம்பதிகள் தனிமையில் இருக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி பணம்பறிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.