ஜூன் 07, ஹாசன் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தாரணி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு இருக்கிறார்.
தற்போது சந்தைகளில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.120 முதல் விற்பனை செய்யப்படும் நிலையில், அடுத்த வாரம் தக்காளிகளை அறுவடை செய்யலாம் என காத்திருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மற்றும் அதற்கு முன்தினம் என 2 நாட்கள் கொள்ளை கும்பல், இவரின் தோட்டத்திற்குள் இரவோடு இரவாக புகுந்து 2 ஏக்கர் விவசாய நிலத்தில் இருந்த தக்காளிகளை பறித்து சென்றுள்ளது. Mobile, Smartphones Banned: வகுப்பறைகளில் இனி ஸ்மார்ட்வாட்ச், செல்போன் பயன்படுத்த தடை – நெதர்லாந்து அரசு அதிரடி.!
மறுநாள் காலையில் வந்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருக்க, நல்ல விளைச்சலில் இருந்த தக்காளிகளை மர்ம கும்பல் பறித்து சென்றுள்ளது. மொத்தமாக இதனால் அவருக்கு ரூ.2.5 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எஞ்சிய தக்காளிகள் காய்களாக செடிகளில் இருக்க, அவைகளை பறித்து மீதமுள்ளவற்றை விற்பனை செய்ய வேண்டும் என தாரணி வருத்தம் தெரிவிக்கிறார்.
தாங்கள் கடன் வாங்கி தக்காளியை பயிரிட்ட நிலையில் ரூ.2.5 இலட்சம் இழப்பால் கடனை எப்படி அடைப்பது? என வழி தெரியாமல் முழிப்பதாகவும் கூறுகிறார். இந்த விஷயம் தொடர்பாக ஹாலிபேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊருக்கே சோறுபோட தன்னலமின்றி உழைத்து வரும் விவசாயியின் வயிற்றில் அடித்ததற்கு கொள்ளை கூட்டம் கட்டாயம் வருத்தப்படும் நாளும் வரும்.