ஜூலை 07, ஆலப்புழா (Kerala News): அசுத்தமான நீரில் வாழும் அமீபாவால் ஏற்படும் அரியவகை மூளைத் தொற்று, கேரளாவின் கடலோர மாவட்டமான ஆலப்புழாவில் பதிவாகியுள்ளது. ஆழப்புழாவை அடுத்த பனவல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நோயாளி குறித்த பிற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முன்பு கடந்த 2017ம் ஆண்டு ஆலப்புழா நகராட்சி பகுதியில் இந்நோய் பதிவாகியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மூளையை உண்ணும் அமீபா, நெக்லேரியா ஃபோலேரி போன்றவை மனிதனைக் கொல்கிறது. Chennai Girl Suicide: ஆன்லைன் மோசடியில் ரூ.45 ஆயிரம் இழந்த 20 வயது சென்னை இளம்பெண் தற்கொலை; நைஜீரிய கும்பல் அட்டூழியம்.. உங்களுக்கும் அழைப்பு வருதா?.. உஷார்.!
இவை தண்ணீருடன் தொடர்புடைய அரிய தொற்று ஆகும். சுதந்திரமாக வாழும் ஒட்டுண்ணி அல்லாத அமீபா பாக்டீரியா மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும் போது மனித மூளை பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நோயின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு, அசுத்தமான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்குமாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மூளையை உண்ணும் அமீபா கொரியவில் பரவலாக ஏற்படும் நோயாகவும் கவ்வணிகப்படுகிறது.