ஏப்ரல் 25, திருச்சூர் (Kerala News): கேரள(Kerala) மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பகுதியில் வசித்து வருபவர் அசோக்குமார். இவர் முன்னாள் பஞ்சாயித்து கவுன்சிலராக இருந்தவர். இவரது மனைவி சௌமியா. தம்பதிகளின் ஒரே மகள் ஆதித்யஸ்ரீ (வயது 8).
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் நிலையில், நேற்று தனது தந்தையின் செல்போனை எடுத்து சார்ஜ் ஏற்றிகொண்டே வீடியோ பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் வெடித்துள்ளது.
அத்துடன் வீட்டில் வெடிவெடித்தது போன்று சத்தம் கேட்டதால் பக்கத்து அறையிருந்த பெற்றோர் ஓடிவந்து பார்த்துள்ளனர். அங்கு ஆதித்யஸ்ரீ பலத்த காயங்களுடன் கிடந்த நிலையில், செல்போனும் வெடித்திருந்ததால் பெரும் அதிர்ச்சியடைந்தனர். Operation Kaveri: சூடான் இராணுவம் – துணை இராணுவம் மோதல் எதிரொலி; தாயகம் திரும்பும் 178 இந்தியர்கள்..!
இதனால் அசோக்குமார் உடனடியாக ஆதித்யஸ்ரீயை மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்பே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பழையனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செல்போன் வெடித்ததற்கான காரணம் என்னவென்று இதுவரையிலும் தெரியவில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், செல்போன் கொடுப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.