Sudan Evacuate Indians | Sudan Crisis (Photo Credit: Twitter @ANI)

ஏப்ரல் 25 , சூடான் (World News): ஆப்ரிக்காவில் உள்ள மிகப்பெரிய நாடான சூடானில் (Sudan) சூடான் ஆயுத படையான இராணுவத்திற்கும், ஆர்.எஸ்.எப் துணை இராணுவத்திற்கும் (Sudan Armed Forces Vs RSF Paramilitary) இடையே இருந்த மோதல் போக்கானது உச்சகட்டத்தை அடைந்து, இராணுவத்தினர் இரண்டு குழுவாக பிரிந்து தங்களுக்குள் தாக்குதலை தொடஙங்கியுள்ளனர்.

அவர்களுக்குள் இராணுவ முகாம்களில் நடந்த மோதல் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதனால் சூடான் போர்க்களமாகியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இராணுவ மோதல்கள் தொடர்பான தகவல் தெரியவரும்போதே அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா தனது நாட்டின் மக்களை அங்கிருந்து உடனடியாக மீட்டது. Alien UFO Video: அமெரிக்க இராணுவ விமானத்தை கடந்து சென்ற ஏலியன் தட்டுகள்; நொடியில் அசுரவேகம்.. வைரலாகும் வீடியோ.!

இந்தியாவும் தனது நாட்டு மக்களை சூடானில் இருந்து மீட்க தேவையான நடவடிக்கையை எடுத்த நிலையில், ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சூடானில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவசர நிலையை கருத்தில் கொண்டு ஐஎன்எஸ் சுமேதாவை சூடானுக்கு அரசு அனுப்பியது.

அதன் வாயிலாக மீட்கப்பட்ட 278 இந்தியர்கள், சூடானில் இருந்து தாயகம் வரவுள்ளனர். அடுத்தகட்டமாக அங்குள்ள இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இந்தியர்களுடன் தங்களின் நாட்டவரையும் பாதுகாப்பாக அழைத்து வர இலங்கை அரசு இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.