டிசம்பர் 29, வடசேரி: காதலனை மறந்து முகநூலில் பேக் ஐடியில் உலாவிய (Love Boy Killed Girl cheating) காதலனின் உண்மை அறியாமல் செயல்பட்ட சிறுமி, இறுதியில் காதலனால் கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. அறியாத வயதில் ஆர்வக்கோளாறு காதலில் விழுந்து பெற்றோர் கண்முன் இரத்த வெள்ளத்தில் கொலையாளியின் பெயரை கூறி மறைந்த சிறுமியின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கேரளா மாநிலத்தில் உள்ள வர்க்கலா, வடசேரியை (Vacachery, Varkala) சேர்ந்த 17 வயது சிறுமி, சம்பவத்தன்று கழுத்து அறுபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு வீட்டின் கதவை தட்டி கூச்சலிட்டுள்ளார். விழித்து வந்த பெற்றோர் மகளின் நிலையை கண்டு பேரதிர்ச்சிக்கு உள்ளாகி, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், சில நிமிடத்திலேயே சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணம் இவர்தான் என ஒருவரின் விபரத்தை கூறிவிட்டு பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். “என் அம்மா, சகோதரிக்கு இல்லாத படிப்பு எனக்கும் வேண்டாம்” – நேரலையில் சான்றிதழை கிழித்த பேராசிரியர்.!
முதற்கட்ட விசாரணையில், சிறுமி செல்போன் உபயோகம் செய்து முகநூலில் மூழ்கியிருந்த நிலையில், பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த கோபு என்ற இளைஞர் சிறுமியை முகநூலில் விரட்டிவிரட்டி காதலித்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமியும் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். இதற்கிடையில், சிறுமி தன்னை தவிர வேறு சில இளைஞர்களோடு முகநூலில் தொடர்பில் உள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறுமியை கண்காணிக்க எண்ணிய கோபு, அகில் என்ற போலியான முகநூல் கணக்கை தொடங்கி சிறுமிக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார். சிறுமியும் நட்பு அழைப்பை ஏற்று பேசி வந்தபோது, காதலில் விழுந்து இருக்கிறார். அகில் பெயரில் உலாவி வந்த கோபு, சிறுமியை நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.
காதலனின் கைவரிசையை அறியாத சிறுமியோ அகிலை பார்க்கச்செல்ல, அங்கு தலைக்கவசம் அணிந்தபடி கோபு இருந்துள்ளார். தலைக்கவசத்தை அகற்றக்கோரி சிறுமி வைத்த கோரிக்கையை தொடர்ந்து சிறுமிக்கு பேரதிர்ச்சி கிடைத்துள்ளது. அப்போது, காதலன் நானிருக்க முகநூலில் என்ன காதல்? என ஆத்திரமடைந்த கோபு சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளார் என்ற விபரம் உறுதியானது.
இதனையடுத்து, கோபுவை கைது செய்த காவல் துறையினர், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் போது பறித்து செல்லப்பட்ட சிறுமியின் செல்போன் மீட்கப்பட்டு ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.