Kerala Woman Kills Illegal Lover by Poisoning Juice (Photo Credit : @manoramaonline X)

ஆகஸ்ட் 04, எர்ணாகுளம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் பிண்டிமன பகுதியில் வசித்து வருபவர் அதீனா (வயது 30). கடந்த புதன்கிழமை அதிகாலை நேரத்தில் காவல்துறையினருக்கு தொடர்பு கொண்ட பெண்மணி தனது வீட்டருகே இளைஞர் ஒருவர் மயங்கி கிடப்பதாகவும், அவர் விஷம் குடித்ததற்கான அடையாளம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை மீட்டு விசாரணை நடத்திய போது அவர் மாதிரப்பிள்ளி பகுதியில் வசித்து வரும் அன்ஸில் என்பது தெரியவந்துள்ளது.

இளைஞரின் இறுதி வாக்குமூலம் :

இதனை தொடர்ந்து ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அதீனா ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளதாக அன்ஸில் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக மருத்துவர்களிடமும் தனது இறுதி வாக்குமூலத்தை அவர் பதிவு செய்துள்ளார். ஆடையின்றி ஆபாச நடனமாட வற்புறுத்திய கணவர்.. திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.! 

மனைவியை உதறி வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு :

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதீனாவை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் அதீனா கொடுத்த ஜூஸில் பூச்சி மருந்து கலந்திருந்ததும் உறுதியானது. இது தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அன்ஸில் ஜே.சி.பி, டிப்பர் லாரி வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே அன்ஸிலுக்கும், அதீனாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

ஜூஸில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை :

இதனை தொடர்ந்து நெருக்கமாக இருவரும் பழகிவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அன்னிஸ் அதீனாவை தாக்கி இருக்கிறார். இதனால் மனக்கசப்பு ஏற்பட்டு கள்ளக்காதலனை கொலை செய்யும் நோக்கில் ஜூஸில் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.