ஆகஸ்ட் 04, காரைக்கால் (Karaikal News): புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் வரிச்சிக்குடி பகுதியில் வசித்து வருபவர் ஹேமா. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வமுத்துக்குமரன். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் திருமணமும் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் பெங்களூரில் வசித்து வந்துள்ளனர்.

ஆடையின்றி நடனமாட வற்புறுத்திய கணவர் :

இதனிடையே தாய் வீட்டுக்கு வந்த ஹேமா தனது கணவர் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமை செய்வதாகவும், நடத்தையில் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். எங்களுக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து விடுங்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் கணவர் தன்னை ஆடையின்றி ஆபாச நடனமாட வற்புறுத்துவதாகவும் பெற்றோர்களிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். Shibu Soren: முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்.. சோகத்தில் ஜார்கண்ட் மக்கள்.!

தூக்கிட்டு தற்கொலை செய்த இளம்பெண் :

இதனால் கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என பெற்றோர்கள் மனதை தேற்றி இருக்கின்றனர். சமீபத்தில் ஆடி மாதத்தில் தாய் வீட்டுக்கு வந்த ஹேமா தூக்கிட்டு (Karaikal Suicide) தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஹேமாவின் உறவினர்கள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..