அக்டோபர் 11, கொச்சி (Kerala News): கேரளாவின் கொச்சி நகரத்தில் இருக்கும் லூலு மால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கொச்சியில் இருக்கும் லூலு மாலில் உலகக்கோப்பையில் கலந்து கொள்ளும் பல நாடுகளின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.
அங்கே இந்தியாவின் தேசிய கொடியை விட பாகிஸ்தானின் கொடி பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்தியா உட்பட மற்ற நாடுகளின் கொடிகளை விட பாகிஸ்தான் கொடி உயரமாக ஏற்றப்பட்டு இருந்தது. Bank Of Baroda Updates: பேங்க் ஆப் பரோடா செல்போன் செயலிக்கு தற்காலிக தடை.! ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு.!
தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு இருக்கும் லூலு மாலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதைத் தொடர்ந்து பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். கொடி விதி மீறப்பட்டதாக லூலு மால் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
விதிகளை பொருட்படுத்தாமல் பெரிய அளவில் கொடியை ஏற்றியும், போலீசாரும் அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. நெட்டிசன்கள் பலரும் இது கேரளாவின் நிலையை குறிப்பதாக கருத்து தெரிவித்தனர்.
தேசியக்கொடிஅவமதிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு ஒருபுறமும், அந்நிய நாட்டு கொடி பெரிய அளவில் ஏன் வைக்கப்பட்டிருக்கிறது? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. விமர்சனங்களும், கோபமான கருத்துக்களும், தொடர்ந்து வந்த நிலையில், லூலுமால் நிர்வாகம் கொடியை அகற்றி விட்டதாக தெரிகிறது. ஆனால் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும், இதுவரை வெளியாகவில்லை.