RBI/Bank Of Baroda Logo (Photo Credit: Wikipedia)

அக்டோபர் 11, புது டெல்லி (India News): இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் பேங்க் ஆப் பரோடா (Bank Of Baroda) இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த வங்கியின் பாப் வேர்ல்ட் (BOB World) செயலியை, புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி தற்காலிக தடை விதித்திருக்கிறது.

பேங்க் ஆப் பரோட ஊழியர்களில் சிலர், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை (Target) அடைவதற்காக, வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அந்நியர்களின் செல்போன் எண்களை பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தது. மேலும், பேங்க் ஆப் பரோடா மொபைல் ஆப்பில் (Mobile App) வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் சில குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. Team India Gift to PM Modi: ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்திய கிரிக்கெட் அணி.. விபரம் உள்ளே.!

மொபைல் ஆப்பில் உள்ள குறைபாடுகளை வங்கி நிர்வாகம் சரி செய்த பிறகு, அது ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் பிறகே பேங்க் ஆப் பரோடாவின் மொபைல் ஆப் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயம், பேங்க் ஆப் பரோடா வங்கியின் தரப்பில், “சில இடைவெளி காரணமாக குறைபாடுகள் ஏற்பட்டிருக்கிறது. அதை நாங்கள் விரைவில் சரி செய்து, ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளோடு இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்.

அது மட்டுமல்லாமல் புதிய வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு (Debit Card), கிரெடிட் கார்டு (Credit Card) உட்பட எங்கள் வங்கியின் அனைத்து டிஜிட்டல் சேவைகளும் (Digital Banking Services) பயன்பாட்டிற்கு சிறந்த முறையில் வழங்கப்படும்.” என்று கூறியிருக்கிறது.