Gangrape (Photo Credit : Pixabay)

ஆகஸ்ட் 18, புதுடெல்லி (New Delhi News): 65 வயதுடைய தாயை 39 வயதுடைய மகன் இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. டெல்லியை சேர்ந்த 39 வயதாகும் நபர் தனது 65 வயதான தாயை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி இரவு 09:30 மணியளவில் வீட்டின் தனி அறையில் தனது தாயை பூட்டியவர் இளமை காலத்தில் தவறான உறவில் இருந்ததற்கு தண்டனை கொடுக்கப்போவதாக கூறியுள்ளார். முதலில் தனது மகன் கூறுவதை கேட்டு குழப்பமடைந்த தாய் கதவை திறந்து விடும்படி கதறியுள்ளார். சென்னை: யூடியூப் பார்த்து பேராசை.. ஆன்லைனில் பங்குச்சந்தை முதலீடு செய்த பெண் தற்கொலை.. இறுதி நிமிட ஆடியோ.! 

தாய் பாலியல் வன்கொடுமை:

ஆனால் தாயின் கதறலை கேட்காத கொடூரன் கடந்த காலத்தில் செய்த தவறுக்கான தண்டனை எனக்கூறி பெற்றெடுத்த தாயை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தவர் எப்படியாவது அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என முயற்சித்த நிலையிலும் பலன் இல்லை. இந்த சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்களுக்குப் பின் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக தாயை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

காவல்துறை விசாரணை:

மகனின் இந்த செயலால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்புதுங்கிய தாய், மகன் வீட்டில் இல்லாத போது தப்பித்து காவல்நிலையத்திற்கு சென்று மகனின் செயல் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெற்றெடுத்த தாயையே பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.