பிப்ரவரி 01, புதுடெல்லி (New Delhi): ஒட்டுமொத்த இந்திய மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த பட்ஜெட் 2025 - 2026 (Budget 2025 - 2026) , பிப்ரவரி 01, 2025 இன்று காலை 11:00 மணியளவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2025-2026 ஐ (Parliament Budget Session 2025) முன்னிட்டு, நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (President Droupadi Murmu) ஒருங்கிணைந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8 வது பட்ஜெட் உரையை மக்களவையில் தாக்கல் செய்தார். இ-பட்ஜெட் 2025 - 2026 இந்திய மக்களின் எதிர்பார்ப்பை ஏற்புத்தியுள்ள பட்ஜெட் என்பதால், உலகளவிலும் கவனிக்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Budget 2025 Announcements Tamil) உரையாற்றி அறிவித்தவை பின்வருமாறு.,
விவசாயத்திற்கான அறிவிப்புகள்:
இந்தியாவின் முதுகெலும்பு என போற்றப்படும் விவசாயத்துறையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு நவீன வசதிகள் கொண்ட தொழில்நுட்பங்கள் குறித்து ஊக்கம் அளித்து வேளாண்மை பெருகப்படும். வேளாண்துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. 1.17 கோடி விவசாயிகள் பலன்பெறும் வகையில், குறைந்த வேளாண் வருவாய் கொண்ட 1000 மாவட்டங்களில் புதிய விவசாய பணிகள் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். கிராமத்தில் இருக்கும் பெண்கள், விவசாயிகள், தொழிலார்களுக்காக 6 அம்ச திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்ககப்படும். பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு என்ற நிலையை எட்ட, மாநில அரசுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். 100 மாவட்டங்களில் தன் தான்யா கிரிஷ் திட்டம் (Dhan Dhaanya Krishi Yojana) 100 மாவட்டங்களில் தொடங்கப்படும். கிஷான் கிரெடிட் கார்டு வரம்பு ரூ.5 இலட்சமாக உயர்த்தப்படுகிறது, 7.7 கோடி விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படும். பருப்பு விவசாயிகளுக்காக சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். மீன் உற்பத்தியை அதிகரிக்க, புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில் தாமரை விதைகள் புதிய வாரியம் அமைக்கப்படும். அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டு, 12.70 இலட்சம் உர உற்பத்தி இலக்காக நிர்ணயம் செய்யப்படும். ஒட்டுமொத்த உர உற்பத்தியை 12.7 இலட்சம் டன் என நிர்ணயிக்க இலக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக மகசூல் தருகிற 100 விதைகள் மீட்டுருவாக்கம் திட்டம், தேசிய இயக்கமாக மாற்றம் செய்யப்படும். ஜவுளித்துறையை ஊக்குவிக்க, பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டம் செயல்படுத்தப்படும். Budget 2025: நாடாளுமன்றத்தில் கூச்சல், அமளி.. எதிர்க்கட்சிகள் கடும் வாக்குவாதம் - பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் நாளே பரபரப்பு.!
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அறிவிப்பு:
இந்தியாவின் மொத்த உற்பத்தியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தின் ஏற்றுமதி 45 % என்ற நிலையில் இருக்கிறது. 7.5 கோடி சிறுகுறு தொழில் முனைவோர்கள் பயனடையும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியாவின் தபால் நிலையத்தின் மூலமாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டார்ட்டப் நிறுவனத்திற்கு ரூ.20 கோடி வரை கடன் மானியம் வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி பெண்களில் தொழில் முனைவோர் 5 இலட்சம் பேருக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். பொம்மையின் உற்பத்தியில் இந்தியா உலகின் தலைநகராக இருக்கிறது. தோல் பொருட்கள் உற்பத்தி துறைகளில் புதிய நிறுவனங்கள் வாயிலாக 22 இலட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். தோல், காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.10000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கல்வி தரம் மேம்படுத்த திட்டங்கள்:
பள்ளியில் அட்டல் டிங்கரிங் ஆய்வகம் ஏற்படுத்தப்படும். ஐஐடியில் பயிலும் மாணவரின் எண்ணிக்கை 100 % உயர்ந்துள்ளது. அரசு மற்றும் உயர்நிலை பள்ளியில் வாய்ப்பை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த கல்வியாண்டில் புதிதாக 10000 மருத்துவ கல்வி இடங்கள் உருவாக்கப்படும். கல்வித்துறையில் ஏஐ தொழில்னடுப்பம் பயன்படுத்தப்படும். தனியாரின் பொதுத்துறை பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் பாடத்தினை தாயமொழியில் படிக்கச், டிஜிட்டல் முறை திட்டங்கள் தொடங்கப்படும்.
நகர மறுசீரமைப்புக்கு ரூ.1 இலட்சம் கோடி:
மாநிலத்திற்கான வட்டியில்லா கடன் ரூ.1.5 இலட்சம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் 2026ல் நினைவுப்பெறும். சுத்தமான குடிநீர் வழங்க மத்திய - மாநில அரசு இணைந்து செயல்படும். நகரத்தின் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.1 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.500 கோடி செலவில் 3 இடத்தில ஏஐ ஆய்வு மையங்கள் ஏற்படுத்தப்படும். 2047 க்குள் அணுசக்தி வாயிலாக 100 கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 2033 ம் ஆண்டுக்குள் சிறிய அளவிலான அணுமின் நிலையம் ஏற்படுத்தப்படும். மின்சார விநியோகத்தில் சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படும். உதான் திட்டத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயனாளிகளை கையாளும் வகையில் புதிதாக 120 இடங்களில் விமான வழித்தடம் ஏற்படுத்தப்படும். பீகாரில் ஆண்டுக்கு 4 கோடி பயணிகள் வரும் வகையில் பசுமை விமான நிலையம் ஏற்படுத்தப்படும்.வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த சிறந்த 50 சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படும். சிறிய அளவிலான நகரங்களுக்கும் விமான சேவைகள் வழங்கப்படும். சுற்றுலாத்துறையினரை ஊக்குவிக்க முத்ரா கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சுற்றுலாத்துறையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடல்சார் தொழிற்சாலைகளை மேம்படுத்த ரூ.25000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஏழைககளுக்காக 40000 குடியிருப்புகள் அமைக்கப்படும்.
புற்றுநோய் சிகிச்சை மையங்கள்:
அனைத்து மாவட்டத்திலும் புற்றுநோய் மையம் ஏற்படுத்தப்பட்டு, ஒரு ஆண்டில் 2000 புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஒவொரு மாவட்டத்தின் தலைநகரில் புற்றுநோய் தடுப்பு மையங்கள் & சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். ஆளின் உணவு டெலிவரி உட்பட பிற அணிகளில் ஈடுபடும் 1 கோடி பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டை, இலவச இன்சூரன்ஸ் ஏற்படுத்தி கொடுக்கப்படும். 2025 நிறைவு பெருவதற்குள், 200 புற்றுநோயாளிகள் சிகிச்சை மையம் திறக்கப்படும். வரும் 3 ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், புற்றுநோய்க்கான இலவச சிகிச்சைகள் வழங்கப்படும். மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க, தனியார் பங்களிப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முத்ரா கடன் திட்டம் maaniyathudan மருத்துவ பணியாளர்களுக்கும் விரிவு படுத்தப்படும். மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க ஹீல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்படும். 8 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முற்றிலும் வரிகள் ரத்து செய்யப்படுகிறது.
புதிய வருமான வரிச்சட்டம் (New Income Tax Bill):
புதிய வருமான வரிச்சட்டம் மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 1961 ம் ஆண்டு முதல் அமலில் இருந்த வருமான வரிச்சட்டம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விண்வெளித்துறை வளர்ச்சிக்கு தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம் ஒன்று உருவாக்கப்படும். மகளிர் சுயஉதவி குழுவுக்கு தனி கிரெடிட் கார்டு வழங்கப்படும். காப்பீடு துறைகளில் அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு 100 % ஆக உயர்கிறது. முன்னதாக 74 % என இருந்தது, தற்போது 100 % என்ற நிலையை எட்டியுள்ளது. நாட்டின் வரிவருவாய் அதிகரித்து, நிதி பற்றாக்குறை குறைகிறது. வரும் நிதியாண்டில் 14.62 இலட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறை 4.8 % ஆக இருக்கிறது.