லே இராணுவ அதிகாரிகள் பயணித்த வாகனம் விபத்து (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 20, ஸ்ரீநகர் (Srinagar): இமயமலைத்தொடரில் அமைந்துள்ள லடாக், லே நகரில் இருந்து 150 கிமீ தொலைவில் நயோமே பகுதியில் கியாரி கிராமம் உள்ளது. இமயமலை பகுதியில் இருக்கும் இந்த கிராமத்தை கடந்து இந்திய இராணுவ எல்லை பாதுகாப்புப்படை அதிகாரிகள், கடுமையான குளிரில் தங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இராணுவ வாகனத்தில் 10 க்கும் மேற்பட்ட படைவீரர்கள் பயணித்தபோது, ஆற்றுப்பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் முதற்கட்டமாக 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். BJP Leader Shot: பாஜக தலைவரை சுட்ட நபர்கள்; மர்ம கும்பல் பகீர் செயல்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்.! 

சனிக்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த விபத்தில், மீட்புப்படை நிகழ்விடத்திற்கு விரைந்து எஞ்சியோரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தது. அவர்களில் அடுத்தடுத்து 3 பேர் பலியானதை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.