Lok Sabha (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 13, புதுடெல்லி (New Delhi News): 2025ம் ஆண்டுக்கான மக்களவை கூட்டத்தொடர், குடியரசுத்தலைவர் உரை, பட்ஜெட் 2025 தாக்கலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் புதிய வருமான வரி சட்டம் தொடர்பான சரத்துகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. சுமார் 622 பக்கங்கள் கொண்ட மசோதாவை, மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்து, புதிய சட்டத்தை அமல்படுத்த முயற்சிகளை முன்னெடுத்து இருக்கிறார். வீட்டில் இருந்தபடி வேலை.. ஓடும் காரில் லேப்டாப்புடன் பெண் செய்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ.! 

தொடர் அமளியால் அவைகள் ஒத்திவைப்பு:

இந்நிலையில், வக்பு மசோதா கூட்டுக்குழு அறிக்கை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளின் தொடர் வாதம் காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை மதியம் 02:00 மணி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மசோதாவில் தங்களின் கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தாங்கள் விவாதிக்க அனுமாகி வேண்டும் என கேட்டு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்ததைத்தொடர்ந்து, நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தொடர் அமளியால் அவைகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு: