ஜனவரி 18, லக்னோ (Uttar Pradesh News): உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிதோராகர்க் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் கன்யால். இவர் கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையத்து, கடந்த 2017ம் ஆண்டு நாடு திரும்பிய ரமேஷ் குமார், இந்திய இராணுவ தரைப்படை அதிகாரிகள் அலுவலகத்தில் சமையலராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
எதிராளிகளுக்கு வழங்கப்பட்ட இராணுவ ரகசியம்: அங்கு வேலை பார்த்து வந்த ரமேஷ், பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பில் வைத்துக்கொண்டு, இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து இருக்கிறார். Shocking Video: நொடியில் பிரிந்த வாகன ஓட்டின் உயிர்: அதிவேகம், அலட்சியத்தால் நடந்த சம்பவம்.. நெஞ்சை பதறவைக்கும் வைக்கும் காட்சிகள்.!
6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு: இந்த குற்றசாட்டு விவகாரத்தில் தீவிர விசாரணை நடந்து ரமேஷ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு எதிரான வழக்கு, லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், ரமேஷ் குமாருக்கு எதிரான குற்றசாட்டுகள் அனைத்தையும் உறுதி செய்ததை தொடர்ந்து, அவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.