ஆகஸ்ட் 30, புதுடெல்லி (New Delhi): சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சந்திர கிரகணம் (Lunar Eclipse) ஏற்படுகிறது. பூமி சூரிய ஒளியை சந்திரன் தடுப்பதால் சிவந்த நிறத்தில் காட்சியளிக்கும். இந்த நிகழ்வு 'ரத்த நிலவு (Blood Moon)' எனவும் அழைக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி 2025 ஆம் ஆண்டுக்கான முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனை இந்தியாவில் வசித்து வருபவர் வெறும் கண்களால் பார்க்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. 2 நாட்களில் ரூ.1,720 உயர்வு.. ஷாக் நிலவரம்.!
இந்தியாவில் சந்திர கிரகணம் 2025 எப்போது (Lunar Eclipse 2025 in India)?
செப்டம்பர் 7ஆம் தேதி இரவு சுமார் 8:59 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், எட்டாம் தேதி அதிகாலை 2:25 வரையில் தெரியும். கடந்த சில ஆண்டுகளாக சிறிய அளவிலான கிரகணங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், இது மிக நீண்ட கிரகணம் எனவும் கூறப்படுகிறது. எந்தவிதமான கருவிகள் உபயோகம் இல்லாமல், வெறும் கண்களால் இதனை எளிதில் பார்க்கலாம். சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு நோக்கி வானை பார்த்தால் முழு சந்திர கிரகத்தை கண்டு ரசிக்கலாம். முழு அளவிலான சந்திர கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறமாக மாறுகிறது. சூரியன் உதிக்கும் போதும், அஸ்தமனத்தின் போதும் இந்த நிறம் தோன்றும்.
பிற நாடுகளில் கிரகணம்:
செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 11:41 மணியளவில் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அலாஸ்கா ஆகிய பகுதிகளிலும் இந்த கிரகணம் தெரியும். உலகளவில் உள்ள 87 விழுக்காடு மக்கள் சந்திர கிரகணத்தை பார்க்கலாம். அடுத்த முழு சந்திர கிரகணம் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் தேதி ஏற்படும் எனவும், அதனை இந்தியாவில் இருப்பவர்கள் தற்போது போல சரியாக பார்க்க இயலாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.