MP & Chhattisgarh Poll 2023 (Photo Credit: @ANI X)

நவம்பர் 17, சென்னை (Chennai): மத்திய பிரதேசம் (Madhya Pradesh), சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கர் (Chhattisgarh Assembly Poll 2023) மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் கடந்த நவம்பர் 07ம் தேதி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று முடிந்தது. அதனைத்தொடர்ந்து, இன்று மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாவது கட்டமாகவும் எஞ்சிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றன.

இதனால் இரண்டு மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் சார்பில் பலத்த பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்படை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 03ம் தேதி வெளியாகிறது.

மத்திய பிரதேசம் (Madhya Pradesh Assembly Election 2023) மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் வகுப்பதிவுகள், இன்று காலை 07 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்புடன் மக்களும் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். Maharashtra Shocker: மதுபோதையில் தாய்க்கு பாலியல் தொல்லை; அண்ணனை இரும்பு ராடால் 18 முறை அடித்தே கொன்ற தம்பி.! 

Vote India (Photo Credit: @ANI X)

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடைபெறும் 70 தொகுகளுக்கான தேர்தலில், 900-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர். மொத்தமாக 1,63,14,479 பேர் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 81,41,624 ஆண் வாக்காளர்களும், 81,72,171 பெண் வாக்காளர்களும், 684 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்.

சத்தீஸ்கர் Bindranawagarh தொகுதியில் உள்ள 9 வாக்குப்பதிவு மையங்கள், மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள மையங்களாக அடையாளம் காணப்பட்டு, பலத்த பாதுகாப்பு மத்தியில் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசம் மாநிலத்தை பொறுத்தமட்டில் 230 தொகுதிகளில் 958 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5,60,60,925 மக்கள் வாக்களிக்க இருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 03ம் தேதி வெளியாகிறது.