MP High Court | Sexual Abuse File Pic (Photo Credit: httpsmphc.gov.in / Pixabay)

போபால் 09 , மத்திய பிரதேசம் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டூர் மாவட்டத்தை (Mandur, Madhya Pradesh) சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2021ல் தனது மாமாவின் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார்.

அப்போது, சிறுமியை இடைமறித்த 22 வயது இளைஞர், சிறுமியின் ஆடைகளை தூக்கி, தோள்பட்டையில் கைவைத்து பாலியல் ரீதியாக நெருங்கி வற்புறுத்தி இருக்கிறார். இதனால் பதறிப்போன சிறுமி மீண்டும் தனது மாமாவின் வீட்டிற்கே ஓடிச்சென்று நடந்ததை கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவாளியின் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டது. Beetles Attack: கிடாவெட்டுக்கு சென்ற உறவினர்களுக்கு நேர்ந்த பயங்கரம்; கதண்டுகள் தாக்கியதில் இளைஞர் பரிதாப பலி.! 

இதனையடுத்து, குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி மேல்முறையீடு செய்துள்ளார். இம்மனுவின் இறுதி விசாரணை குறித்த தீர்ப்பு நேற்று நீதியரசர் பிரேம் நாராயண் சிங் அமர்வில் வாசிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பில், "சம்பந்தப்பட்ட இளைஞர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக நெருங்கியது முதல் தகவல் அறிக்கை மற்றும் அவரது வாக்குமூலத்தின் பேரில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இளைஞன் சிறுமியின் ஆடைகளை தூக்கியது, தோள்பட்டையில் கைகளை கொண்டு சென்றது என அவரின் நடவடிக்கைகள் பாலியல் ரீதியிலான விஷயங்களை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.

இதனால் இவ்விவகாரத்தில் குற்றவாளிக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லுபடியாகும். குற்றத்தை செய்துவிட்டு பின்னாளில் தவறு செய்தவர் திருந்தினாலும், அவர் ஏற்படுத்திய வடு என்பது பாதிக்கப்பட்டவருக்கு தொடரும். அவை மனதில் இருந்து அகற்றப்பட வேண்டும். அதற்குள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை குறைக்க சொல்லி தவறு செய்துவிட்டு மேல்முறையீடு செய்வது சரியானது இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.