ஏப்ரல் 03 , இந்தூர் (Madhya Pradesh): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் (Indore, Madhya Pradesh), பெலேஸ்வர் மகாதேவ் கோவிலில் கடந்த ராம பண்டிகையன்று (Rama Navami) படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்தது.
படிக்கட்டுகளில் நின்றவாறு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துகொண்டு இருந்ததால், பாரம் தாங்காது கிணறு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 35 பேர் (Madhya Pradesh Indore Temple Stepwell Collapsed 35 Died) பரிதாபமாக பலியாகினர். Janhvi Kapoor: திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஜான்வி கபூர்.. தரையில் விழுந்து பக்தியுடன் தரிசனம்.!
விபத்தை தொடர்ந்து இந்தூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகர காவல் துறையினர் விழா ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். கோவில் நிர்வாகிகளான தலைவர் மற்றும் துணைத்தலைவர் கைதும் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், 35 பேரின் உயிரை காவு வாங்கிய கோவிலில் கட்டப்பட்டு இருந்த சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
#WATCH | Madhya Pradesh: Indore municipality deploys bulldozer & demolishes illegal structure at Indore temple where 36 people died after the stepwell collapse there last week. pic.twitter.com/gpRJB6zWhN
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 3, 2023