Madhya Pradesh Road Accident 17.07.2023 | Visual from Spot (Photo Credit: Twitter)

ஜூலை 17 , சாகர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டம், சனோதா ஜடசங்கர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று கனகர வாகனம் - எஸ்யுவி காரும் (Truck SUV Collison) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நபர்களில் 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சிய 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். Madhya Pradesh Shocker: 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; பாஜக எம்.எல்.ஏ மகன் உட்பட 4 பேர் கைது.!

இவர்களில் இருவர் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுனர் பப்பு குமாரை கைது செய்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்களில், கனகர வாகனம் மரத்தின் மீது மோதி பள்ளத்தில் விழாமல் நின்றது.