Visual From Spot (Photo Credit: Twitter)

ஜூன் 07, செஹோர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள செஹோர் (Sehore, Madhya Pradesh), முங்கையொலி (Mungaoli) கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகள் சிருஷ்டி குஷ்வாஹா (வயது 2). சிறுமி நேற்று தனது வீட்டருகே உள்ள நிலத்தில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கிருந்த 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுமி தவறி விழுந்துள்ளார்.

இதுகுறித்த தகவலை அறிந்த பெற்றோர் மகளை காப்பாற்ற கூக்குரலிட, அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு துறையினருடன் அதிகாரிகள் விரைந்து வந்துள்ளனர். Mumbai Shocker: 18 வயது கல்லூரி மாணவி பலாத்காரம், கொலை.. குற்றவாளி இரயில் முன்பாய்ந்து தற்கொலை.. நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்.!

முதற்கட்ட தகவலின்படி குழந்தை 50 அடி ஆழத்தில் இருந்த நிலையில், அதற்கு தேவையான ஆக்சிஜன் வசதி செய்து கொடுக்கப்பட்டது. பின், குழந்தையை வெளியே எடுக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமி தொடர்ந்து வலுவிழந்து வருவதால், அவர் மேலும் 20 அடி கீழ்நோக்கி சென்றுள்ளார்.

அப்பகுதியில் உள்ள நிலத்தின் தன்மை கடினமான பாறை அமைப்பு கொண்டது என்பதால், குழந்தையை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மீட்பு படை அதிகாரிகளிடம் விபரம் குறித்து கேட்டறிந்த அம்மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான், குழந்தையை பத்திரமாக மீட்க அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறார்.

பயன்படுத்தாமல் இருந்த ஆழ்துளை கிணற்றை மூடி வைத்திருந்தால் இவ்வாறான சோகம் நிகழ்ந்து இருக்காது. மாறாக அலட்சியத்துடன் இருந்த நபர்களால் இன்று குழந்தையின் உயிர் ஊசலாடி வரும் சோகம் நடந்துள்ளது.