Rape | Hanged Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 07, மும்பை (Maharashtra Crime News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, மரைன் டிரைவ் பகுதியில் சாவித்ரிபாய் பெண்கள் (Mumbai Women Rape and Killed Hostel Body Found Naked) தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியை அரசு நிர்வகித்து நடத்தி வருகிறது. விடுதியின் 4-வது மாடியில் அகோலா பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி, பகுதி நேரம் வேலை பார்த்தவாறு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் 18 வயது பெண்மணி விடுதியில் உள்ள தனது அறையில் நிர்வாணமாக தூக்கில் தொங்கினார். கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டு இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மரைன் டிரைவ் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்துகையிலேயே கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் விடுதியில் வேலை பார்த்துவந்த 33 வயதுடைய காவலாளி பிரகாஷ் கனோஜியா (Prakash Kanojia) மாயமாகி இருக்கிறார். இதனால் அவரே மாணவியை பலாத்காரம் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. Coimbatore Love Killed: நள்ளிரவில் நண்பர்களுடன் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞர்; தாய்மாமாவின் பரபரப்பு சம்பவத்தால் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.! 

Mumbai Marine Drive Hostel Suicide Case Investigation (Photo Credit: ANI)

பிரகாஷுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள், மனைவி இருக்கும் நிலையில் காம எண்ணத்துடன் கொடூரம் நிகழ்ந்துள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது. தனது குற்றச்செயலை எண்ணிய பிரகாஷ், விடுதியில் இருந்து தப்பி சென்று மரைன் லைன் இரயில் நிலையம் - சர்ச்கேட் இடையேயான பகுதியில் இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப வறுமையிலும் பகுதிநேர வேலை பார்த்து படித்து வந்த கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது. இதுபோன்ற குற்றங்களை தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.