Baby Death - File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 30, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷஹ்டோல் மாவட்டம், பந்த்வா கிராமத்தில் வசித்து வரும் தம்பதிக்கு, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 21ம் தேதி கைக்குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மூட நம்பிக்கையால் சோகம்: இதனையடுத்து, சிறுவனுக்கு உடல்நலம் சரியாக, அவரை மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவில்லை. மாறாக, குடும்பத்தினரின் மூட நம்பிக்கைப்படி, சூடான இரும்பு கம்பி கொண்டு சூடு வைத்ததாக தெரியவருகிறது. Indonesia Earthquake Today: இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளை தாண்டி பதிவு.! 

கடுமையாக மோசமடைந்து உடல்நலம்: இதனால் குழந்தையின் உடல்நலம் மோசமாகவே, அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடிய குழந்தை, இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

காவல்துறையினர் விசாரணை: இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.