MP Shocker: மாற்றுத்திறன் இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய பெண்மணி; கையெடுத்து கும்பிட்டு மன்றாடியும் தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
மாற்றுத்திறன் இளைஞரை இளம்பெண் கம்பியில் கட்டி வைத்து குச்சியால் தாக்கும் சம்பவம் நடந்துள்ளது. விடியோவை அங்கிருந்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஜூன் 03, சோணாகுட்ச் (Trending Video): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சோணாகுட்ச் மாவட்டம், டௌலத்பூர் பகுதியில் காது கேட்காத, பேச இயலாத மாற்றுத்திறன் வாலிபர் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று அவரை இளம்பெண் ஒருவர் கம்பியில் கட்டி வைத்து குச்சியால் தாக்கும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விடியோவை அங்கிருந்த நபர் மறைவாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். Karnataka Suicide: ஆன்லைன் கேமில் ரூ.65 இலட்சம் இழந்ததால் சோகம்; கடன் நெருக்கடியால் உயிரை மாய்த்த பரிதாபம்.. கண்ணீரில் மனைவி.!
இந்த வீடியோ வைரலாகவே, பெண்மணிக்கு எதிராக பல்வேறு கண்டன குரல்கள் குவிந்து வருகின்றன. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அதிகாரிகள் தற்போது வரை பெண்ணுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது வீடியோ வைரலாகியுள்ள நிலையில், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் வீடியோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
मध्यप्रदेश देवास सोनकच्छ महिला द्वारा मुकबधिर युवक को बांध कर डंडे से पिटाई करते #वीडियोवायरल @INCMP pic.twitter.com/npT5DPrJ5w
— manishkharya (@manishkharya1) July 1, 2023
(The above story first appeared on LatestLY on Jul 03, 2023 01:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

