நவம்பர் 17, மிர்கான் (Madhya Pradesh): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளிலும், இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகின்றன. 230 தொகுக்களில், 2500க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5.59 கோடி வாக்காளர்களில் 2.87 கோடி ஆண் வாக்காளர்களும், 2.71 கோடி பெண் வாக்காளர்களும் இருக்கின்றனர்.

5000 வாக்குப்பதிவு மையங்கள் பெண்களின் நிர்வாத்தின் கீழும், 183 வாக்குப்பதிவு மையங்கள் மாற்றுத்திறனாளிகள் நிர்வாகத்தின் கீழும் இருக்கின்றன. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் துப்பாக்கி இந்திய துணை இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள மிர்கான் தொகுதி, 147-148 டிமானி வாக்குச்சாவடி மையத்தில் திடீரென இருதரப்பு மோதிக்கொண்டது. கற்களை வீசி தாக்குதலும் நடைபெற்றது. தகவல் அறிந்த காவல் துறையினர் கூடுதலாக களமிறங்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். Viral Video: சமோசாவில் இறந்து கிடந்த பல்லி; ஆசையாக வாங்கி சாப்பிட்ட தந்தை-மகளுக்கு நேர்ந்த துயரம்.! 

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய் சிங் பதோரியா பேசுகையில் "இருதரப்பு மோதல் மற்றும் கல்வீச்சு தொடர்பாக தகவல் அறிந்து நாங்கள் அங்கு விரைந்தோம். சம்பத்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் இருந்த நபர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர்.

ஒருவர் கல்வீச்சில் தலையில் காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. சில கிராமத்தினர் துப்பாக்கிசூடு குறித்து கருத்து தெரிவிக்கிறார்கள். அவை நடந்தது உண்மையா? என தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது" என கூறினார்.