நவம்பர் 17, கபூர் (Social Viral): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கபூர் நகரில் வசித்து வருபவர் மனோஜ் குமார். இவருக்கு மனைவி, மகன், மகள் இருக்கின்றனர். நேற்று மனோஜ் மற்றும் அவரின் மகளுக்கு சமோசா சாப்பிட வேண்டும் என தோன்றியுள்ளது.
இதனையடுத்து, தனது மகன் மூலமாக, தனது வீட்டருகே செயல்பட்டு வரும் கடையில் சமோசா வாங்கி சாப்பிட்டுள்ளார். அச்சமயம், சமோசாவுக்குள் பல்லி (Hapur Lizard Found Dead in Samosa) ஒன்று கிடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர், செய்வதறியாது விழிபிதுங்கியுள்ளார். Fake Corpses Protest: வெள்ளை மாளிகை முன்பு குவிக்கப்பட்ட பிணங்கள்: கடும் கண்டனத்துடன் நடந்த அதிர்ச்சி போராட்டம்.!
இதனிடையே, சமோசா சாப்பிட்ட மனோஜ் குமாரின் மகளுக்கு உடல்நலம் குன்றியுள்ளது. விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மனோஜும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் என்பது கேள்விக்குறியாகி, அதனை வாங்கி சாப்பிடும் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுவது தொடர்கதையாகிறது. சில நேரங்களில் மரணமும் நிகழுகின்றன.
மேற்கூறிய சம்பவத்தில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் உட்பட எவரும் சம்பவம் குறித்து தற்போது வரை விசாரணை நடத்தவில்லை. இதனால் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான துயரங்களை தடுக்க, ஒவ்வொரு உணவு தயாரிப்பாளர்களும் தங்களின் செயலில் முழு கவனம் எடுத்து செயல்படுதல் அவசியமாகிறது.
#ViralVideos: हापुड़ में समोसा खाते समय आलू की जगह छिपकली देख व्यक्ति के उड़ गए होश pic.twitter.com/IhAUcw1vR8
— princy sahu (@princysahujst7) November 16, 2023