ஏப்ரல் 05 , உஜ்ஜைன் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் (Ujjain Railway Station) இரயில் நிலையத்தில், தனது பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டது. அப்போது, தாமதமாக வந்த 2 பேர், இரயிலின் சில இறுதி பெட்டிகளில் முன்பு இருந்து ஏற முயற்சித்துள்ளனர்.
அப்போது, ஒருவர் கால் இடறி கீழே விழுந்துவிட, அவர் இரயிலின் ஓட்டத்தால் சக்கரங்களுக்கும் - தண்டவாளத்திற்கும் - நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.
மற்றொருவர் இரயிலுடன் சில அடி தூரம் பயணித்து தனது உயிரை காப்பாற்றிக்கொண்டார். நடைமேடையில் இடையே பயணி சிக்கி விழுவதை கண்ட இரயில் பாதுகாவலரும் ஓட்டுனருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். Hanuman Jayanti 2023: அனுமன் ஜெயந்தியை அமைதியாக கொண்டாட நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.!
இரயில் மெதுவாக நகர்ந்து சென்றதால் அதனை ஓட்டுனரும் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து, காயத்துடன் மீட்கப்பட்ட பயணி துரிதமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்த விடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இரயில்வே காவல் துறையினர், துரிதமாக செயல்பட்ட காவலர்கள் மகன் சிங்க், குல்தீப் ஆகியோரை பாராட்டியுள்ளது.
उज्जैन रेलवे स्टेशन पर ड्यूटी में तैनात 15वीं वाहिनी रेसुवि बल के आरक्षी मगन सिंह व आरक्षी कुलदीप ने अन्य यात्रियों के साथ मिलकर चलती गाड़ी में चढ़ने/उतरने का प्रयास कर रहे दो यात्रियों की प्राण रक्षा की तथा घायल यात्री को उचित उपचार हेतु भेजा। #ऑपरेशन_जीवनरक्षा pic.twitter.com/UqTptxpoyE
— RPF INDIA (@RPF_INDIA) April 4, 2023