Lord Hanuman Tweet by Home Minister Amith Shah (Photo Credit: Twitter)

ஏப்ரல் 05, புதுடெல்லி (New Delhi): கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி ராம நவமி (Ram Navami 2023) கொண்டாடப்பட்டது. அப்போது, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விழாவை சிறப்பித்த மக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. சில இடங்களில் வன்முறை (Violence & Stone Attack), கல்வீச்சு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன. பாதுகாப்பு கருதி பல இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஏப்ரல் 06ம் அனுமன் ஜெயந்தி (Hanuman Jayanti 2023) கொண்டாடப்படவுள்ளது. அனுமன் ஜெயந்தியை அமைதியான முறையில் நடத்தி முடிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amith Shah, Union Home Minister) மாநில அரசை அறிவுறுத்தி, அதனை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். Kichcha Sudeepa Campaingn BJP: கர்நாடக மாநில தேர்தலில் பாஜகவுக்கு ஆதராக நடிகர் கிச்சா சுதீப் பிரச்சாரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

அவரது ட்விட்டர் பதிவில், "ஹனுமன் ஜெயந்திக்கு தயாராகும் வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பேணுதல், பண்டிகையை அமைதியாகக் கடைப்பிடித்தல் மற்றும் சமூகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் காரணிகளைக் கண்காணித்தல் போன்றவற்றை உறுதி செய்ய மாநில அரசு ஊக்குவிக்கப்படுகின்றன" என கூறப்பட்டுள்ளது.