Borivali Cop | Accuse Suresh Kumawat File Pic (Photo Credit: ANI)

ஜூன் 08, மும்பை (Maharashtra Crime News): உயிருக்கு உயிராக இருந்த நண்பன் தனது மனைவியை அபகரித்து துரோகம் தாங்காது மனமுடைந்த நிலையில், சமாதானம் பேசலாம் என நண்பனின் கதைமுடித்த கள்ளக்காதல் மோகம் குறித்த கண்ணீர் தகவலை விவரிக்கிறது இந்த செய்தி.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, போரிவேலி (Borivali , Mumbai) பகுதியை சேர்ந்தவர் தினேஷ் பிரஜாபதி (வயது 38). இவர் சிற்றுண்டி கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். சி.சி.டி.வி பொருத்தும் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளராக வேலைபார்த்து வந்தவர் சுரேஷ் குமாவட் (வயது 26).

தினேஷின் மனைவிக்கும் - சுரேஷுக்கும் (Suresh Kumawat) இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கள்ளக்காதல் ஜோடி பல இடங்களுக்கு தனிமையில் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியின் கள்ளக்காதல் குறித்து தினேஷ் அறிந்துள்ளார். Thane Shocker: சாலையை கடக்க முயற்சித்த 10 வயது சிறுமி லாரி மோதி தூக்கி வீசப்பட்டு பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

பின்னர் அவர் தனது மனைவி மற்றும் அவரின் கள்ளக்காதலன் சுரேஷ் குமாவட் ஆகியோரை கண்டித்து இருக்கிறார். இருப்பினும் கள்ளக்காதல் ஜோடி தங்களின் முடிவில் மாறாமல் இருந்ததாக தெரியவருகிறது. கடந்த ஜூன் 1ம் தேதி போரிவேலி கிழக்கு பகுதியில் உள்ள இராஜேந்திரா நகரில் இருவரும் சந்தித்து இருக்கின்றனர்.

அங்கு சமாதான பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ் தினேஷை (Dinesh Prajapati) சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். பின், அவரின் உடலை கத்தியால் துண்டு துண்டாக அறுத்து, யாவருக்கும் சந்தேகம் வராத வகையில் செயல்பட்டு காஷ்மீரி வனப்பகுதிக்கு அவரின் உடலை கொண்டு சென்றுள்ளார்.

வனப்பகுதியில் தினேஷின் உடலை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சுரேஷ், உடல் முழுவதுமாக எரியும் வரையில் காத்திருந்து சந்தேகம் வரக்கூடாது என சாம்பலை அங்கேயே தூவி மரமும் நட்டுவைத்து வந்துள்ளார். தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால், தனது செல்போனில் இருந்து உறவினர்கள் மற்றும் குடும்பத்திற்கு தற்கொலை முயற்சி வீடியோ அனுப்பி இருக்கிறார். Liquor Challenge: நேரலையில் மதுகுடித்த யூடியூபருக்கு இப்படியா நடக்கணும்?.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. சவால் தந்த பரிசாக மரணம்.!

அந்த வீடியோவில், தனது வாழ்வில் கடந்த காலத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விபரீத முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர், தங்களின் மகனை காப்பாற்றக்கூறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் விரைந்து செயல்பட்டு சுரேஷை காப்பாற்றினார்.

மறுபுறம் தினேஷ் மாயமானது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 50 சி.சி.டி.வி கேமிரா காட்சிகள், அலைபேசி அழைப்புகள் ஆகியவை சோதனை செய்யப்பட்டு விசாரணை சுரேஷின் மீது திரும்பியுள்ளது.

அவரிடம் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் முதலில் விசாரணை நடத்தியபோது உண்மையை தெரிவிக்கவில்லை. பின் அதிகாரிகள் தரவுகளை திரட்டி மேற்கொண்ட துரித விசாரணையை தொடர்ந்து உண்மை அனைத்தும் அம்பலமாகியுள்ளது. இதில் பெரும் அதிர்ச்சியே சுரேஷும் - தினேஷும் நல்ல நண்பர்கள் என்பதுதான். இந்த தகவலை கேட்டு அதிகாரிகள் அதிர்ந்துபோயினர்.