Living Together Girl Murder Case Mumbai Today (15.02.2023)

பிப்ரவரி 15, நலசோப்ரா: மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் உள்ள மும்பை (Mumbai), நலசோப்ரா விஜய் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது, வீட்டின் படுக்கையறையில் இருக்கும் கட்டிலின் அடியில் அழுகிய நிலையில் (Women Death Mystery) பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதனையடுத்து, பெண்ணை யாரேனும் கொலை (Crime - Murder) செய்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து நடந்த விசாரணையில், பெண்ணின் பெயர் மேகா ஷா (வயது 37) என்பது தெரியவந்தது. இவரும், ஹர்திக் ஷா என்பவரும் திருமணம் (Without Marriage) செய்யாமல் லிவிங் டுகெதர் (Living Together) உறவில் வாழ்ந்து வந்துள்ளனர். மேகா செவிலியராக (Nurse) பணியாற்றி வந்துள்ளார்.

ஹர்திக் ஷா ஒரு கட்டத்திற்கு மேல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், வீட்டின் செலவுகளை மேகா ஷா கவனித்துக்கொண்டு வந்துள்ளார். இது இருவருக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி பயங்கர சண்டை போட்டுள்ளது அக்கம் பக்கத்தினரால் உணரப்பட்டுள்ளது. 144 Section Implemented: கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல், கல்வீசி தாக்குதல்.. 144 தடை உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள்.!

ஒருகட்டத்தில் வீட்டில் இருந்த மரப்பொருட்களை விற்பனை செய்யும் பழக்கத்தையும் ஹர்திக் கையில் எடுத்துள்ளார். இதற்கிடையே கொலை சம்பவமும் நடைபெற்ற நிலையில், அப்போதும் மரப்பொருட்களை விற்பனை செய்து கிடைத்த பணத்துடன் ஹர்திக் தப்பி சென்றுள்ளார்.

அவரை காவல் துறையினர் தீவிரமாக தேடியபோது ஹர்திக் இரயிலில் தப்பி சென்றது உறுதியானது. இதனையடுத்து, மத்திய பிரதேசம் (Madhya Pradesh) மாநிலத்தில் உள்ள நாக்டாவில் பதுங்கியிருந்த ஹர்திக்கை கைது (Accuse Arrest) செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளாக நட்பில் (Friendship) இருந்த இருவரும், ஆறு மாதங்களுக்கு முன்பு லிவிங் டுகெதர் வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். அப்போது, இவர்களுக்குள் வாடகை மற்றும் மாத செலவுகளை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட தகராறில் மேகாவை ஹர்திக் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, ஹர்த்திக்கை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். லிவிங் டுகெதரில் வாழ்ந்து பார்க்கலாம் என நினைத்த பெண்ணை கொன்று புதைத்த பயங்கரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 15, 2023 09:25 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).