ஏப்ரல் 08, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டம், மன்காபூர் பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில் பாலத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. பாலத்தின் மேலே ஏறிய கனரக லாரி, கீழே அதிக வேகத்தில் (Nagpur Accident Today) இறங்கியதாக தெரிய வருகிறது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்திற்கு கீழே பாய்ந்துள்ளது. இதனால் அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார், ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள் உட்பட ஒன்பது வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 12க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். IPL 2024 Point Table Update: ஐபிஎல் 2024-ல் முதல் 21 போட்டிகள் நிறைவு; புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார் விபரம்? இதோ.!

ஓட்டுநரின் அலட்சியம் காரணமாக பறிபோன உயிர்கள்? தகவல் அறிந்து உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்ற அதிகாரிகள், படுகாயம் அடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியானோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுனரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என தெரியவரும் நிலையில், விசாரணை நடத்து வருகிறது. மேற்படி விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.