ஏப்ரல் 08, புதுடெல்லி (Sports News): ஐபிஎல் 2024 தொடரின் இரண்டு ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நேற்று நடைபெற்றது இருபதாவது ஆட்டத்தில் மோதிக்கொண்ட மும்பை மற்றும் டெல்லி (MI Vs DC) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 234 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டெல்லி அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை அடைந்தது.

21வது ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி: அதனைத் தொடர்ந்து 21வது ஆட்டம் குஜராத் மற்றும் லக்னோ (GT Vs LSG) அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 18.5 அவர்கள் முடிவில் தனது பத்து விக்கெட் இழந்து 130 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனால் லக்னோ 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. BJP Chief Wife Car Stolen Case: பாஜக தேசியத்தலைவர் மனைவியின் கார் திருடுபோன விவகாரம்; கார் மீட்பு, 2 பேர் அதிரடி கைது..!

புள்ளிப்பட்டியல் விபரம்: இதனையடுத்து, புள்ளி பட்டியல் (IPL Points Table) முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடனும், மூன்றாவது இடத்தில் லக்னோ அணி 6 புள்ளிகளுடனும், நான்காவது இடத்தில் சென்னை அணி 4 புள்ளிகளுடன் இருக்கிறது. ஐபிஎல் ஆட்டத்தை பொறுத்தவரையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அரையிறுதி தகுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டிக்கு தேர்வாகும் என்பதால், புள்ளி பட்டியலில் உள்ள முதல் நான்கு அணிகள் அடுத்தடுத்த வெற்றிக்காக போராட வேண்டி உள்ளது.