Mumbai Pune Old Express Way Bus Fall Down Valley Accident Visual (Photo Credit: ANI)

மார்ச் 15, ராய்காட் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை (Mumbai), கோரேகான் பகுதியில் இருந்து, ராய்காட் (Raigad) மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு சென்ற மக்கள், அங்கிருந்து புனேவை (Pune) நோக்கி தங்களின் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

இந்த சுற்றுலாவுக்கு 45 பேர் சென்றிருந்த நிலையில், அனைவரும் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், பேருந்து ராய்காட் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டு இருந்துள்ளது.

அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 12 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். Car Bus Accident: தேசிய நெடுஞ்சாலையில் கார் – தனியார் பேருந்து மோதி கோர விபத்து; 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.!

மேலும், 25 க்கும் அதிகமான பயணிகள் காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

காயமடைந்தோர் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.