செப்டம்பர் 11 , தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தானே மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 40 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் வேலையாட்கள் தொடர்ந்து தங்களின் பணிகளை கவனித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அதிகாலை 05:30 மணியளவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில், பணியாளர்கள் சென்றுகொண்டு இருந்த லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரினத்தனர்.
எஞ்சிய சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சையில் இருந்த இருவர் அடுத்தடுத்து பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. Tirupattur Accident: பழுதாகி நின்ற வேனின் மீது லாரி மோதி பயங்கர விபத்து; 7 பெண்கள் பரிதாப பலி.. அதிகாலையிலேயே தமிழ்நாட்டில் சோகம்.!
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றனர். இவ்விபத்திற்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியானவர்கள் அதிகாலை நேரத்தில் தங்களின் இரவு பணிகளை முடித்துவிட்டு, ஓய்விடத்திற்கு திரும்பியபோது விபத்து நடந்து தெரியவந்துள்ளது. விபத்தில் பலியானவர்கள் மகேந்திர சொருபால் (வயது 32), ரூபேஷ் குமார் தாஸ் (வயது 21), ஹாரூன் ஷேய்க் (வயது 47), மிதிலேஷ் (வயது 35), காரிடாஸ் (வயது 38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
#WATCH | Five people died, and a few were injured after a lift collapsed in Maharashtra's Thane: Thane Municipal Corporation pic.twitter.com/AuDiVms1aW
— ANI (@ANI) September 10, 2023