
பிப்ரவரி 28, சென்னை (Technology News): வீட்டை, சுற்றுச் சூழலுக்கு ஏற்பவும் இயற்கை சார்ந்த வகையில் அமைப்பது என்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறதே தவிர பெரும்பான்மையானவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. பலரும் இயற்கைக்கு உதவும் வகையில் வீட்டை மாற்றுவது கடினமான விஷயம் என்றே இதை மேற்கொள்ள தங்குகின்றனர். ஆனால் மக்கும் பொருட்கள், மறுசுழற்சி பொருட்கள் பயன்படுத்துவது மேலும் வீட்டில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலமே, நல்ல சுற்றுச் சூழலை ஆதரித்து, இயற்கைக்கு உகந்த வீடாக மாற்றலாம். இது இயற்கைக்கும், மனித வாழ்க்கைக்கும் பாதுகாப்பானதாக இருக்கும்.
சின்ன வீடே போதுமே
வீடு கட்டும் போதே ஆடம்பரமாக இல்லாமல் தேவைக்கு மட்டுமே சிறிய அளவில் வீடு கட்டலாம். பெரிய வீடாக கட்டுவதால் எதிர்காலத்தில் மின்சாரம் முதல் அதை சுத்தம் செய்வது வரை அனைத்திற்கும் செலவுகள் ஏற்படுவதும் நேரமும், சக்தியும் வீணாகும். கிராமப்புறங்களில் வீடு கட்டுபவர்கள் முடிந்தால் மண் அல்லது மர வீடுகள் கட்டி இயற்கையை பாதுகாக்க உதவலாம். மண் மற்றும் மர வீடுகளிலும் தற்போது நவீனத்தை புகுத்தி சிமெண்ட், செங்கல் வீட்டின் தரத்திலேயே வீடுகள் கட்டுகின்றனர். மேலும் வீடுகளில் அதிக வெளிச்சம் மற்றும் காற்று உட்புகுமாறு கட்ட வேண்டும். இவைகள் மின்சார தேவையைக் குறைக்க உதவும். Water Tank: குறைந்த விலையில் சிறந்த தண்ணீர் தொட்டி.. அசத்தல் டிப்ஸ் இதோ..!
மழைநீர் சேமிப்போம்
மிகக் குறைவானவர்களே வீடுகளில், மழைநீர் சேமிப்புத் தொட்டி அமைத்து கட்டுகின்றனர். பெருநகரங்களில் இருப்பவர்களும் சிறிய அளவிலான தொட்டியை மாடியிலோ அல்லது நிலத்திலோ அமைத்து சேமிக்க முடியும். சேமித்த தண்ணீரை எடுத்து பயன்படுத்தலாம். இதனால் மின்சாரம் முதல் நிலத்தடி நீர் வரை மிச்சப்படுத்தலாம். தொட்டிகள் சிமெண்ட் அல்லது மரத் தொட்டிகள் பயன்படுத்தலாம். மழை நீரை அப்படியே வைத்திருந்து ஒரு வரை பயன்படுத்த முடியும்.
இடமெல்லாம் தோட்டம்
தோட்டம் அமைத்து செடி வளர்ப்பது பலரின் ஆசையாக இருந்தாலும், அதற்கான முயற்சியும் இட வசதியும் இன்றி இதை கைவிட்டு விடுவர். ஆனால் தோட்டம் அமைக்க சிறிய இடமே போதும். செடி வகையிலான காய்கறிகளை வீட்டிலேயே எளிமையாக வளர்க்கலாம். இடம் குறைவானவர்கள் ஜன்னல், படிகட்டுகள் போன்ற இடத்தில் தொட்டிகல் வைத்து செடிகள் வளர்க்கலாம். தொங்கும் தொட்டிகளில், சுவர் தோட்டம். அடுக்கு டிரே என பல விதங்களில் அழகிய தோட்டங்களை வீட்டில் அமைக்கலாம். வீட்டிலேயே கய்ய்கறி கழிவுகளைப் பயன்படுத்தி உரமும் தயாரித்துக் கொள்ளலாம்.
எல்ஈடி
வீடுகளில் எல்ஈடி பல்புகளைப் பயன்படுத்த வேண்டும். இது மின்சார செலவை குறைப்பதுடன், குறைவான வெப்பத்தையே வெளிப்படுத்துகிறது. இந்த எல்ஈடி பல்புகளுக்கு வாழ்நாளும் அதிகம். சுற்றுப்புற பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் இந்த எல்ஈடி பல்புகளும் பெரும்பங்கு வகுக்கின்றன.
சோலார்
சூரிய சக்தியே தீர்ந்து போகாத சக்தியாக உள்ளது. அதைப் பயன்படுத்தி மின்சாரம் எடுத்து பயனுள்ளதாக மாற்ற வேண்டும். வீட்டில் சோலர் பேனலை அமைத்து பயன்படுத்தலாம். இது மின்சார சக்தியை தருவதுடன் வெப்பத்தையும் குறைக்கிறது. வீட்டின் மேற்கூறையில், அல்லது போர்டிக்கோ போன்ற இடங்களில் சோலார் பேனல் அமைக்கலாம்.
பிளாஸ்டிக் இல்லா வீடு
என்னதான் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என நினைத்து பிளாஸ்ட்கை பைகளை தவிர்த்து வந்தாலும், வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்ட் தான் அதிகமுள்ளது. அவைகளைக் கண்டறிந்து இயற்கையை பாதிக்காத வகையில் மாற்ற வேண்டும். உதாரணமாக பிளாஸ்டிக் டூத் பிரஸ்களுக்கு பதில் மரத்தாலான பிரஸ்களைப் பயன்படுத்தலாம். மரக் கரண்டிகள், காகித, துணிப்பைகள், மூங்கில் பிரஸ்கள், மறுசுழற்சி செய்யும் பொருட்கள், தென்னைநாற்றில் செய்த மேட்கள், மர பொம்மைகள், செடிகலூக்கு மரக் குடுவைகள் என மறு செய்யக் கூடியப் பொருட்களிலும், எளிதில் மக்கக் கூடிய பொருட்களையும் பயன்படுத்தலாம்.