மார்ச் 09, திருவனந்தபுரம் (Kerala News): மலையாள திரைப்பட நடிகர், வழக்கறிஞர் சுக்கூர் (Adv Shukkur). இவரின் மனைவி ஷீனா (Dr Sheena) சுக்கூர். இவர் கண்ணூர் (Kannur) பல்கலை.,யில் சட்டத்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். தம்பதிகள் கடந்த 1994ல் இஸ்லாமிய முறைப்படி (Sharia Law Marriage) திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கதீஜா ஜாஸ்மின், பாத்திமா ஜெபின், பாத்திமா ஜெசா என 3 மகள்கள் இருக்கின்றனர்.
சுக்கூர் - ஷீனா தம்பதிகள் முஸ்லீம் தனிநபர் சட்டமான ஷரியத்தின் கீழ் திருமணம் செய்ததால், இவர்களுடைய சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு சொத்து மகள்களுக்கு செல்லும். ஒருபங்கு சொத்து சுக்கூர் சகோதரர்களுக்கு செல்லும். அவர் தனது சொத்துக்களை 3 மகள்களுக்கும் பிரித்து உயில் எழுதி வைக்க இயலாது என்பது அவர்களின் மரபு.
சகோதரர்களுக்கு சொத்துக்களை வழங்க எண்ணமில்லாத சுக்கூர், தனது 3 மகள்களுக்கு அதனை சரிசமமாக பிரித்து வழங்க விரும்பியுள்ளார். இதனால் தம்பதிகள் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய முடிவெடுத்து, சர்வதேச பெண்கள் தினமான நேற்று அங்குள்ள ஹோசதுர்க் சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு திருமணம் செய்துள்ளனர். Chennai Airport Customs: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.32 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!
இந்த சிறப்பு திருமணத்தில் தம்பதியரின் 3 மகள்களும் கலந்துகொண்டு திருமண நிகழ்வை கேக் வெட்டி கொண்டாடி சிறப்பித்தனர். தம்பதிகளுக்கு உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வி.வி. ரமேஷின், கோழிக்கோடு வழக்கறிஞர் சங்க தலைவர் சஜீவ் ஆகியோர் சாட்சியாக சார்பதிவாளர் அலுவலக பதிவேட்டில் கையொப்பம் இட்டனர்.
திருமணம் குறித்து சுக்கூர் - ஷீனா தெரிவிக்கையில், "என் 3 மகள்களும் பாலின பாகுபாடை சந்தித்து இருக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க தாசில்தாரிடம் திருமண சான்றிதழ் பெற்று, எனது சொத்துக்களை மகள்களுக்கு பங்கிட்டு கொடுக்க முடிவெடுத்து திருமணம் செய்தோம். நாங்கள் விளம்பரம் தேடிக்கொள்ள அல்லது இஸ்லாமிய சமூகத்தில் சர்ச்சை ஏற்படுத்த திருமணம் செய்யவில்லை. பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கை, கண்ணியம் போன்றவற்றை ஏற்படுத்தும் முயற்சியாக திருமணம் செய்தோம்" என தெரிவித்தார்.