ஆகஸ்ட் 28, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், நாந்தேட் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவானி. திருமணமான இவருக்கு, ஏற்கனவே லக்கன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவ நாளன்று சஞ்சீவானி தனது நண்பர் லக்கனை வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு இருவரும் மூடிய அறையில் தகாத உறவில் காணப்பட்டனர். அப்போது, வீட்டிற்கு வந்த சஞ்சீவானி குடும்பத்தினர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கூகுள் மேப்பால் பறிபோன 4 உயிர்.. ஆன்மீக சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்.!
இருவர் கைது:
இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் மற்றும் பெண்ணின் தந்தை சேர்ந்து இருவரையும் கொடூரமான முறையில் கொலை (Murder) செய்தனர். மேலும், அவர்களின் உடல்களை கிணற்றில் வீசினர். இதுகுறித்த விசாரணையில், காவல்துறையினர் அவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை, அவரது கணவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.