ஆகஸ்ட் 28, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்து சில நாட்களாகவே கனமழையானது தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் 9 பேர் ஆன்மீக சுற்றுலா பயணம் சென்றுள்ளனர். இவர்கள் ஆன்மீக சுற்றுலாவை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்கு நேற்று இரவில் வேனில் திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தொண்டரை தூக்கி வீசியதாக தவெக தலைவர் விஜய் மீது எஃப்.ஐ.ஆர்.. இழப்பீடு கேட்டு தாய் கோரிக்கை.!
ஆற்றுக்குள் வேனை பாய்ச்சிய ஓட்டுநர் :
அப்போது வேன் ஓட்டுநர் கூகுள் மேப்பை பார்த்தபடி காரை இயக்கியுள்ளார். இந்நிலையில் உடல் அயர்வு காரணமாக குடும்பத்தினர் அனைவரும் உறங்கிய நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக கடந்து சில மாதங்களாக மூடப்பட்டிருந்த சொமி உப்ரிடா பாலத்தை கூகுள் மேப் பயன்பாட்டில் இருப்பது போல காட்டியுள்ளது. இதனை அடுத்து வேன் ஓட்டுனர் வேனை இயக்கிய நிலையில், வேன் திடீரென பனாஸ் ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. Coimbatore News: இரத்த தானம் செய்தவருக்கு கெட்டுப்போன ஜூஸ்.. கோவை மருத்துவமனையில் பகீர்.!
வேனில் பயணம் செய்த 4 பேர் பலி :
இந்த சம்பவத்தில் வேனில் பயணம் செய்த 5 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் உயிர் தப்பி கரை ஏறினர். இவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த மீட்பு படையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்த உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.