
மே 25, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் குதிரை சவாரிக்கான அகாடமி ஒன்று பிரத்தியேகமாக செயல்பட்டு வருகிறது. இந்த அகாடெமிக்குள் கடந்த மே மாதம் 17ஆம் தேதி அத்துமீறி நுழைந்த 30 வயதுடைய நபர் ஒருவர் குதிரையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கிட்டி கார்டன் பகுதியில் செயல்பட்டு வரும் குதிரை ஏற்ற அகாடமியில் இந்த கொடுமை நடந்துள்ளது. Bride Calls Wedding Off: தாலியேறவேண்டிய கடைசி நொடியில் ட்விஸ்ட்.. காதலனுடன் ஓடிய மணப்பெண்.!
சிசிடிவி காட்சிகளை கண்டு அதிர்ந்த உரிமையாளர் :
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கண்டு அதிர்ந்த அகாடமியின் உரிமையாளர், காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரவு நேரத்தில் அகாடமியில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி நுழைந்து இந்த வன்கொடுமை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தற்போது சர்ச்சைக்குரிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.