Minister Amit Shah Holds Nehru Responsible for PoK During Parliament Debate (Photo Credit : @ANI X / Wikipedia)

ஜூலை 29, புது டெல்லி (New Delhi News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததால் பதில் தாக்குதலாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு ஒத்துழைப்பது போல் செயல்பட்ட பாகிஸ்தான் அரசு, இந்திய எல்லைகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள மக்கள் மீது தாக்குதலை முன்னெடுத்தது.

இந்தியா - பாகிஸ்தான் போர் :

இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நிலையில், பதிலடி தாக்குதல்களும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் தாக்குதல்கள் இந்திய வான்வழி பாதுகாப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய் ஸ்ரீ முகமது உட்பட பல்வேறு பயங்கரவாத நிலைகளை இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தி வந்தது. இதனை அடுத்து போரை பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. Operation Sindoor: தமிழன் கங்கையை வெல்வான்.. அமித்ஷா Vs கனிமொழி.. அனல்பறந்த விவாதம்.! 

சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து பேசிய அமித் ஷா :

போர் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் விவாதிக்கவேண்டும் என வலியுறுத்தியதன் பேரில் இன்று அதற்கான பதில் உரை வழங்கப்பட்டு வருகிறது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்த தவறு காரணமாக இந்திய எல்லைப் பகுதிகள் சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. 80% சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு இதுவரை இந்தியா வழங்கி வருகிறது. எதிர்க்கட்சியினருக்கு தேசப்பற்று என்பது இல்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம் பாகிஸ்தான் அரசை காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார். இந்தியாவின் மீது பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் இதுவரை நடந்துள்ளன. காங்கிரஸ் அரசு மட்டும் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் அரசை காப்பாற்றுவது போல செயல்படுவது ஏன்?

1948 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய ராணுவத்தின் நிலைப்பாடு :

ஜவஹர்லால் நேரு மீது அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு :

கடந்த 1948 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. போரை முடிவுக்குக்கொண்டு வர அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்து பிரச்சனையை ஐ.நா.மன்றத்திற்கு கொண்டு சென்றார். அதன் விளைவாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஒப்பந்தங்கள் நடந்தது. இந்திய ராணுவம் வலிமையாக இருந்த அந்த காலத்திலேயே நேரு தீர்க்கமான ஒரு முடிவை எடுத்திருந்தால் இன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற பிரச்சனை இருந்திருக்காது. சர்தார் வல்லபாய் படேல் பாணியில் நேரு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை அவர் செய்யவில்லை" என குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் :

இந்த நிலையில் 1948 இல் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது இந்திய ராணுவம் தனது வலிமையை இழந்து காணப்பட்டது குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாக சர்தார் வல்லபாய் படேல் கோபாலசாமி ஐயங்காருக்கு எழுதிய கடிதத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அமைச்சர் அமித் ஷா அவர்கள் பேசுவதற்கு முன் கோபாலசாமி ஐயங்காருக்கு, சர்தார் வல்லபாய் படேல் எழுதிய கடிதத்தில் உள்ள புள்ளி எண் 3ஐப் ஒருமுறை பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோபால்சாமி ஐயங்காருக்கு சர்தார் வல்லபாய் படேல் எழுதிய கடிதத்தை பகிர்ந்த பவன் கேரா :