Women Army Officer | Defence Ministry (Photo Credit: Indian Defence Review / Logopedia)

மே 08, புதுடெல்லி (Army News): மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் (Defence Ministry) சார்பில் பெண்களும் இராணுவத்தில் (Women Army Officers) சேர்ந்து பணியாற்றும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த காலங்களில் கடற்படை (Coastal Force) மற்றும் விமான படையில் (Airforce) பெண் விமானிகள் பயிற்சிக்கு பின்னர் பணியமர்த்தப்பட்டனர்.

இராணுவத்தில் (Army) எதிரி நாடுகளுக்கு அருகே பணியாற்றும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தபோது, பல சர்ச்சை பதிகளிலும் அங்கு நிலவி இருந்தன. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் பெண்களுக்கு எல்லையில் (Line Of Control) இராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ராணுவ விவகாரங்கள் துறை உள்நாட்டு ராணுவ படைப்பிரிவில் ஏற்கனவே உள்ள விதிகளில் பெண் அதிகாரிகளின் பணிகள் குறித்த திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. NEET Exam: “உள்ளாடையை கழட்டிட்டு வா” – நீட் தேர்வு எழுத சென்ற மாணவிக்கு நடந்த சோகம்…! சென்னையில் தேர்வு கண்காணிப்பாளர் கெடுபிடி.!

உள்நாட்டு ராணுவத்தில் 2019-ம் ஆண்டு முதல் பெண் அதிகாரிகள் சுற்றுச்சூழல் பணிக்குழு பிரிவுகள், எண்ணெய்த்துறை பிரிவுகள் மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், உள்நாட்டு ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு மேலும் வேலை வாய்ப்பை நீட்டிக்கும் முடிவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப்ரல் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தார்.

உள்நாட்டு ராணுவத்தில் பெண் அதிகாரிகள் இனி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பணிபுரியும் வாய்ப்பு வழங்ப்படுகிறது. அதன்படி, எல்லையில் பொறியியல் பிரிவிலும், புது தில்லியில் உள்ள உள்நாட்டு ராணுவ தலைமையகத்திலும் தேவைகளுக்கேற்ப பெண் இராணுவ அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த முற்போக்கான கொள்கை நடவடிக்கை, பெண் அதிகாரிகளின் வேலை வாய்ப்பை மேம்படுத்துவதோடு, அவர்களின் தொழில்முறை தேவைகளையும் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது பெண் ராணுவ அதிகாரிகளும், ஆண் அதிகாரிகளைப் போன்று சவாலான பயிற்சிகளையும், பணிகளையும் மேற்கொள்வர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.