ஆகஸ்ட் 31, புதுச்சேரி (Puducherry News): புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவருமான ரங்கசாமி முதல்வராக பணியாற்றி வருகிறார். சட்டப்பேரவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 10 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 9 உறுப்பினர்களும், திமுகவுக்கு 6 உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 2 உறுப்பினர்களும், 6 சுயேட்சை உறுப்பினர்களும் என 33 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
2 அமைச்சர்கள் தொந்தரவு செய்வதாக வீடியோ :
2026 ஆம் ஆண்டு தமிழகத்தை போல புதுச்சேரியிலும் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்கள் 2 பேர் தன்னை தொந்தரவு செய்வதாக பெண் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Lunar Eclipse 2025: இன்னும் 8 நாட்கள் தான்.. வானில் ஏற்படப்போகும் மாற்றம்.. ரத்த நிலவை காண தயாராகுங்கள்.!
நீங்களும் வாழுங்கள், என்னையும் வாழ விடுங்கள் - பெண் எம்.எல்.ஏ வீடியோ :
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சந்திர பிரியங்கா வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் அமைச்சராக இருந்தபோது 2 பேர் எனக்கு பல டார்ச்சர் தந்தனர். அதை எதையும் சொல்லிக் கொள்ளாமல் அமைதியாக வெளியே வந்தேன். இன்றும் அவர்களின் டார்ச்சர் தொடர்கிறது. நான் யார் என பெயர் சொல்ல விரும்பவில்லை. அனைவரையும் தவறாக கூற முடியாது. ஒரு சிலர் நம்மை வருந்த வைக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். நீதிமன்ற உத்தரவு, காவல்துறை உத்தரவு என ஒவ்வொரு விஷயத்திலும் அமைச்சர் ஒருவரின் தூண்டுதலின் பெயரால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் நடக்கிறது. நீங்களும் வாழுங்கள் என்னையும் வாழ விழுங்கள்." என தெரிவித்தார்.
பெண் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ :
View this post on Instagram