Decreased Victim Air Cooler File Pic (Photo Credit : YouTube)

மே 11, காமரெட்டி (Telangana News): மாநிலத்தில் உள்ள காமரெட்டி மாவட்டம்(kamareddy), குல்லா தண்டாவில் வசித்து வருபவர் பிரகலாத். இவரது மனைவி சங்கபாய் (வயது 36). தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பிரகலாத் ஹைதராபாத் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து வீட்டில் சங்கபாய் மற்றும் அவரின் 16 வயது மகன், இளைய மகள் ஸ்ரீவாணி (வயது 12) மூவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

மின்சாரம் பாய்ந்து தாய் - மகள் பலி:

அப்போது தாய் இரவில் சூடாக இருந்ததால், கோடை வெப்பத்தை தணிப்பதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த ஏர்கூலரை ஆன் செய்து தூங்கியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக சிறுமி ஸ்ரீவாணியின் கால் ஏர்கூலர் மீது பட்டதை தொடர்ந்து, அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் பயந்த சிறுமி அருகில் தூங்கிக் கொண்டிருந்த தாயை இறுகப் பிடித்த நிலையில், இருவரும் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போதையில் லிவிங் டுகெதர் பார்ட்னரை போட்டுத்தள்ளிய பெண்.. பதறவைக்கும் சம்பவம்.! 

வழக்குப்பதிவு செய்த போலீசார் :

இதனைத் தொடர்ந்து காலையில் எழுந்த மகன், தனது தாய் மற்றும் சகோதரியின் நிலையை கண்டு பதறி அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் காவல்துறையினரை தொடர்பு கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பகீர் :

இதனையடுத்து விசாரணை செய்த நிலையில், ஏர்கூலரில் உள்ள குளிர்விப்பான் இரும்பின் தரம் காரணமாகவே மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.